×

இந்திய கம்யூனிஸ்ட் கோரிக்கை புலியூர் அடுத்துள்ள குடியிருப்புவாசிகளுக்கு சுடுகாடு அமைக்கமாற்று இடம் தர கோரிக்கை

கரூர், பிப். 18: புலியூர் அடுத்துள்ள புரவிபாளையம், குளத்துப்பாளையம், அமராவதி நகர், ஆசிரியர் காலனி உட்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த குடியிருப்புவாசிகளுக்கு சுடுகாடு, இடுகாடு அமைக்க மாற்று இடம் ஏற்படுத்தி தர வேண்டும் என்று மக்கள் குறைதீர் கூட்டத்தில் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர். கரூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமை வகித்து, பொதுமக்களிடம் குறைகள் குறித்தான மனுக்களை பெற்று துறை அதிகாரிகளிடம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.
இந்த முகாமில், புலியூர் அடுத்துள்ள புரவிபாளையம், குளத்துப்பாளையம், அமராவதி நகர், ஆசிரியர் காலனி உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வழங்கிய மனுவில் தெரிவித்துள்ளதாவது: மேற்கண்ட பகுதிகளைச் சுற்றிலும் குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்த 5ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்கள் சமுதாய மக்களுக்கு சுடுகாடு மற்றும் இடுகாடு பல தலைமுறைகளாக இருந்து வந்தது.

இந்நிலையில், ஒரு சிலரால் தனியார் சிமெண்ட் ஆலைக்கு விற்பனை செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, நெடுஞ்சாலைக்கு வடபுறம் உள்ள இடத்தை பயன்படுத்தி வந்தோம். தற்போது, நெடுஞ்சாலைத்துறையினர் சாலையை நேர் செய்வதற்காக பேரூராட்சி அதிகாரிகளிடம் பேசி வருவதாக கூறப்படுகிறது. மாற்று இடம் வழங்கி விட்டு சாலை நேர் செய்யப்படும் என கூறப்பட்டது. தற்போது, எந்தவித முன்னறிவிப்பு இன்றி மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் எங்கள் சமுதாய மக்களுக்கு சுடுகாடு மற்றும் இடுகாடு அமைக்க மாற்று இடம் ஏற்படுத்தி தர வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.

Tags : Communist ,Indian ,Residents ,Puliyur ,
× RELATED முற்றுகை போராட்டம்