×

வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள அனைத்து குடும்பத்திற்கும் மாதம் 35 கிலோ அரிசி

கரூர், பிப்.18: புத்தாம்பூர் கிராமத்தில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள அனைத்து குடும்பத்தினருக்கும் மாதம் 35 கிலோ அரிசி வழங்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கிளைக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இந்திய கம்யூனிஸ்டு கட்சி தாந்தோணிஒன்றிய புத்தாம்பூர், வடுகபட்டி., ஆறுரோடு கிளைக்கூட்டம் நடைபெற்றது. சாமிநாதன் தலைமை வகித்தார். மாவட்டநிர்வாகக்குழு உறுப்பினர் தங்கவேல் கூட்டமுடிவுகளை விளக்கி பேசினார். மாவட்டக்குழுஉறுப்பினர் சண்முகசுந்தரம், சின்நநசாமி, கருப்பசாமி, சிவகுமார், ஆறுமுகம்,பெருமாள், கந்தசாமி, மருதமுத்து, சின்னசாமி, பால்ராஜ் கலந்துகொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

வடுகபட்டி பொதுமக்கள் பயன்பாட்டிற்காக சமுதாயக்கூடம் கட்ட வேண்டும். மணல்மேடு முதல் புத்தாம்பூர் வழியாக வடுகபட்டி வரைஉள்ள பழுதடைந்த சாலையை புதிய தார்சாலையாக அமைக்க வேண்டும். கரூர் முதல் ஆத்துமேடுவரை மணல்மேடு, புத்தாம்பூர், வடுகபட்டி வழியாக வந்துசெல்லும் வகையில் புதிய பேருந்து வழித்தடத்தை ஏற்படுத்த வேண்டும். ஆறுரோடு பேருந்து நிறுத்தத்திற்கு அனைத்து பேருந்துகளும் சர்வீஸ் சாலையில் வந்து பயணிகளை ஏற்றி இறக்கிச் செல்ல வேண்டும். புத்தாம்பூர் கிராமத்தில் வசிக்கும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள அனைத்து குடும்பத்தினருக்கும் மாதம் 35 கிலோ அரிசி வழங்க வேண்டும். 60 வயதான அனைவருக்கும் எவ்வித நிபந்தனையுமின்றி மாத ஓய்வூதியம் ரூ.3,000 வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags : families ,
× RELATED பத்தமடையில் இடிந்து காணப்படும்...