×

அரவக்குறிச்சி பாவாநகரில் ஆக்கிரமிப்பில் உள்ள அரசு இடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்

கரூர், பிப்.18: அரவக்குறிச்சி பேரூராட்சி பாவாநகரில் அரசுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில்ம கலெக்டரிடம் மனு கொடுத்தனர். கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அடுத்துள்ள பாவா நகர் பகுதியினர் மாவட்ட கலெக்டரிடம் வழங்கிய மனுவில் தெரிவித்துள்ளதாவது:
அரவக்குறிச்சி பேரூராட்சிக்குட்பட்ட பாவாநகர் பகுதியில் 500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறோம். இந்த பகுதியில் முறைப்படி அனுமதி பெற்று வீடுகள் கட்டி குடியிருந்து வருகிறோம். இதில் குறிப்பிட்ட பொதுப்பாதை பேரூராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தாராபுரம் சாலை சந்திக்கும் பகுதியின் அருகே உள்ள ஆக்கிரமிப்பு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளோம். எனவே, ஆக்கிரமிப்பு இடத்தை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

வெள்ளியணை தென்பாகம் மேட்டுப்பட்டியை சேர்ந்த சிலர் வழங்கிய மனுவில், கரூர் வெள்ளியணை வழியாக ஜெகதாபி செல்லும் வழியில் திருமலைநாதன்பட்டி நால்ரோட்டின் வழியாக அதிகளவு வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக, பொதுமக்களுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது. எனவே, மக்கள் நலன் கருதி சந்திப்பு பகுதியில் வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டம் லாலாப்பேட்டையை சேர்ந்த மாற்றுத்திறனாளி நாகராஜ் என்பவர் வழங்கிய மனுக்களில் தெரிவித்துள்ளதாவது:
கரூர் மாவட்டம் லாலாப்பேட்டை அடுத்துள்ள கள்ளப்பள்ளியில் செயல்பட்டு வரும் அரசு ஆதி திராவிடர் நல தொடக்கப்பள்ளி வளாகத்தில் பழைய கட்டிடங்களை மாற்றி விட்டு மாணவ, மாணவிகள் நலன் கருதி புதிய கட்டிடம் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுகா அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் இசேவை மையத்தை வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும். தற்போது வெயில் காலம் என்பதால் மக்களால் நீண்ட நேரம் நிற்க முடியாத நிலை உள்ளது. எனவே, இதனை வேறு கட்டிடத்துக்கு மாற்ற வேண்டும் என மனுக்களில் தெரிவித்துள்ளார்.

Tags : Arawakurichi ,Bhavanagar ,
× RELATED அரவக்குறிச்சி ஒன்றியத்தில் பசு, எருமையை தாக்கும் புரூசெல்லோசிஸ் நோய்