×

மத்திய, மாநில அரசை கண்டித்து நெய்வேலியில் ஆர்ப்பாட்டம்

நெய்வேலி, பிப். 18:  தேசிய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை வண்ணாரப்பேட்டையில் போராடிய இஸ்லாமிய ஆண்கள், பெண்கள் மீது தடியடி நடத்திய காவல்துறையை கண்டித்தும், மதரீதியாக மக்களை பிளவுபடுத்தும் மத்திய பாஜக அரசை கண்டித்தும், அதற்கு துணைபோகும் மாநில அதிமுக அரசை கண்டித்தும் நெய்வேலி மந்தாரக்குப்பத்தில் ஜெயப்பிரியா பேருந்து நிலையம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மதிமுக பிச்சை தலைமை தாங்கினார். திமுக கம்மாபுரம் ஒன்றிய செயலாளர் திருமால்வளவன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்தில் தேசிய குடியுரிமை திருத்த சட்டத்தை நடைமுறைப்படுத்த மாட்டோம் என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும், வண்ணாரப்பேட்டை முஸ்லிம் மீது தடியடி நடத்திய காவல்துறையினரை கண்டித்து கோஷம் போட்டனர்.  இதில் நெய்வேலி மந்தாரக்குப்பம் கங்கைகொண்டான் பேரூராட்சி உள்ளடக்கிய பெரியாக்குறிச்சி கடை வீதியில் இருந்து ரோமாபுரி வரை வர்த்தக சங்கங்களின் ஆதரவுடன் 500க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சி மதர்ஷா, மனிதநேய மக்கள் கட்சி இப்ராஹிம், விசிக ஜோதிபாசு, அசுரன், மக்கள் நீதி மய்யம் கஜேந்திரன், நாம் தமிழர் கட்சி ஸ்டீபன் மற்றும் அனைத்து கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Protests ,Neyveli ,Center ,
× RELATED சென்னையில் இருந்து விக்கிரவாண்டி,...