×

மருமகனை குத்திக்கொன்ற மாமனார் சிறையில் அடைப்பு

வெள்ளக்கோவில்,பிப்.18: வெள்ளகோவில் அருகே முதல் திருமணத்தை மறைத்து தனது மகளை 2வதாக காதலித்து திருமணம் செய்த மருமகனை கொலை செய்த மாமனார் சிறையில் அடைக்கப்பட்டார். வெள்ளக்கோவில் அடுத்த குமாரவலசை சேர்ந்த சூர்யா(50). பஸ் ஸ்டாண்ட் அருகே பூக்கடை நடத்தி வருகிறார். இவரது மகள் சினேகா(19) வெள்ளக்கோவில் அருகே உள்ள மோலகவுண்டன்வலசு ராஜசேகர்(25) என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். கலப்பு திருமணம் என்பதால், சூர்யா கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தார். இருப்பினும் மாமனார் பூக்கடையில் ராஜசேகர் பணிபுரிந்து வந்தார். ராஜசேகர், சினேகா தம்பதிக்கு 3 வயதில் தர்ஷனி என்ற மகளும், பிறந்து 10 நாட்கள் ஆன ஆண் குழந்தையும் உள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில்  பூக்டைக்கு வந்த சூர்யா தனது மருமகன் ராஜசேகரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். பின்னர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ராஜசேகரை நெற்றியில் குத்தியுள்ளார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த வெள்ளகோவில் போலீசார் சூர்யாவை கைது செய்து விசாரணை நடத்தினர். ஏற்கனவே திருமணம் ஆன ராஜசேகர் அதை மறைத்து சூர்யாவின் மகளை சினேகாவை காதலித்து 2வது திருமணம் செய்துள்ளார். கலப்பு திருமணம் என்பதால் இது சூர்யாவிற்கு பிடிக்கவில்லை. இதனால் தொடர்ந்து சண்டை வந்துள்ளது. சூர்யாவை மிரட்டிய ராஜசேகர் அவரது பூக்கடையை நடத்தி வந்துள்ளார். வாரத்தில் ஒரு நாள் மட்டும் சூர்யா நடத்தினார். இதனால் கடும் ஆத்திரமடைந்து சூர்யா, மருமகன் ராஜசேகரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். கைது செய்யப்பட்ட சூர்யா காங்கயம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, நேற்று மாலை கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags : Son-in-law ,father-in-law ,
× RELATED சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி...