கம்யூனிஸ்டுகள் தெருமுனை பிரசாரம்

காங்கயம்,பிப்.18:மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சிகள் தெருமுனை பிரசாரம் செய்து வருகிறது.

காங்கயம் பஸ் நிலைய வளாகத்தில்  நேற்று மாலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் திருவேங்கடசாமி தலைமையில் தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் செல்லமுத்து பொன்னுசாமி, ரவி, மார்க்சிஸ்ட்  கமியூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் ரங்கராஜ், வி.பி. பழனிசாமி, வேலுச்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர். இந்த பிரசாரம் காங்கயம் பகுதியில் உள்ள பல்வேறு இடங்களில் நடைபெற்றது.

இதே போல அவிநாசி, சேவூர், திருமுருகன்பூண்டி ஆகிய பகுதிகளில் மா.கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தெருமுனை பிரச்சாரக் கூட்டங்கள் நேற்று இரவு நடைபெற்றது. இதில் திருப்பூர் சிபிஎம்.மாநிலக்குழு காமராஜ் தலைமை தாங்கினார். சிபிஐ.மாவட்ட செயலாளர் ரவி முன்னிலை வகித்தார். ஒன்றிய செயலாளர் இசாக், ஒன்றிய துணைச்செயலாளர் கோபால், ராமசாமி,சுப்பிரமணி, மோகன், முத்துசாமி, வெங்கடாசலம், வேலுசாமி, ஈசுவரமூர்த்தி, பழனிசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்று விரிவாக பேசினர்.

Related Stories: