×

சிவன்மலை அடிவாரத்தில் தொழிற்சாலை கழிவுகள்

காங்கயம்,பிப்.18:சிவன்மலை அடிவாரத்தில் தொழிற்சாலை  கழிவுகளை  கொட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஊராட்சி நிர்வாகம்  எச்சரிக்கை விடுத்துள்ளது. காங்கயம் அருகேயுள்ள சிவன்மலை அடிவாரத்தில் பல இடங்களில் கட்டுமான மற்றும் ஓட்டல் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளது. நள்ளிரவில் மர்ம நபர்களை  சிவன்மலை அடிவாரத்தில் இருந்து செல்லும் கல்லேரி மற்றும் கோவில்பாளையம்  ஆகிய பிரிவுகளில் சாலையோரம் லாரிகளில் கொண்டு வந்து கொட்டி விட்டு சென்று விடுகிறார்கள். இவ்வாறு கொட்டப்படும் கழிவுகளில் சாம்பல் மற்றும் கழிவகள் அதிக அளவில் உள்ளன. இதனால் சாலையோரம் அசுத்தப்படுவதுடன், காற்றில் பறந்து சென்று அந்த வழியாக செல்வோர் மீது பட்டு அசுத்தம் செய்து விடுவதாக பொதுமக்கள் புகார் கூறியுள்ளனர்.

இது குறித்து சிவன்மலை ஊராட்சி தலைவர் துரைசாமி கூறுகையில்: காங்கயம் பகுதியில் இயங்கி வரும் ஒரு குறிப்பிட்ட தொட்டிக்கரி மூலம் கார்பன்  தயாரிக்கும் தொழிற்சாலையில் இருந்து ஆலை கழிவுகளை கொண்டு வந்து இவ்வாறு கொட்டிவிட்டு சென்றுள்ளனர். கொட்டப்பட்ட ஆலை  கழிவுகளை உடனடியாக அகற்ற வேண்டும் .இல்லையென்றால் அவர்கள் மீது ஊராட்சி நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.

Tags :
× RELATED ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரி ஆண்டுவிழா