×

தண்டராம்பட்டு அருகே 9 லட்சம் மதிப்பில் திறந்தவெளி கிணறு அமைக்கும் பணி தொடக்கம்

தண்டராம்பட்டு, பிப்.18: தண்டராம்பட்டு அருகே ₹9 லட்சம் மதிப்பில் திறந்த வெளி கிணறு அமைக்கும் பணி நேற்று முன்தினம் தொடங்கியது.தண்டராம்பட்டு அடுத்த பேராயம்பட்டு கிராமத்தில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் பிடிஓ, ஊராட்சி தலைவரிடம் மனு அளித்தனர்.அதன்பேரில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் கிராம பொதுமக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக கிராமத்தில் உள்ள வேடியப்பன் கோயில் அருகே நேற்று முன்தினம் புதியதாக திறந்தவெளி கிணறு ₹9.75 லட்சம் மதிப்பில் அமைக்கும் பணி தொடங்கியது. இதனை ஊராட்சிமன்ற தலைவர் கிருஷ்ணமூர்த்தி துவக்கி வைத்தார்.
தில், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் கவிதா, உதவி செயற்பொறியாளர் தணிகாசலம், ஊராட்சி செயலாளர் சுரேஷ் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Tags : wells ,Dandarambattu ,
× RELATED பிஎன்பி பரிபாஸ் ஓபன் டென்னிஸ்: அல்காரஸ், ஸ்வியாடெக் சாம்பியன்