×

தொடர் திருட்டு எதிரொலி பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க போலீசார் விழிப்புணர்வு பிரசாரம்

பெரணமல்லூர், பிப்.18: சேத்துப்பட்டு பகுதிகளில் தொடர் திருட்டு சம்பவங்கள் நடந்து வருவதால், பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டிய எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து போலீசார் விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர்.சேத்துப்பட்டு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் திருட்டு சம்பவங்கள் நடந்து வருகிறது. வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிடும் மர்ம ஆசாமிகள, பகல் நேரத்திலேயே வீடு புகுந்து, உட்புறம் தாழ்ப்பாள் போட்டுக்கொண்டு திருடிவிட்டு, பின்புறமாக வெளியேறி விடுகின்றனர்.கடந்த சில நாட்களில் மோரக்கணியனூர் பகுதியில் மின்வாரிய ஊழியர் சந்திரசேகர் என்பவரது வீட்டில் 20 சவரன் நகைகள், தேவிகாபுரம் பகுதியில் தினேஷ்குமார் என்பவரது வீட்டில் 50 சவரன் நகைகள் மற்றும் ₹2 லட்சம் ரொக்கம், பெரணம்பாக்கம் பகுதியில் துணைத்தலைவர் சத்தியநாதன் என்பவரது வீட்டில் 10 சவரன் நகைகள், ₹25 ஆயிரம் ரொக்கம் என இதுவரை சுமார் 80 சவரன் நகைகள் மற்றும் ₹2 லட்சம் வரை பணத்தை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றுள்ளனர்.

மேலும், இந்த திருட்டு சம்பவங்கள் அனைத்தும் பகல் நேரத்திலேயே நடந்திருப்பதால் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருடர்கள் குறித்து இதுவரை துப்பு கிடைக்காமல் போலீசார் தடுமாறி வருகின்றனர்.இந்நிலையில், சேத்துப்பட்டு போலீசார் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், திருட்டு சம்பவங்கள் நடக்காமல் இருக்க வேண்டியும், பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து ஆட்டோவில் ஒலிப்பெருக்கி மூலம் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், எஸ்பி சிபி சக்கரவர்த்தி தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், அனைத்து காவல் நிலையங்களிலும் உள்ள தனிப்பிரிவு போலீசார் வாரத்தில் குறிப்பிட்ட நாட்களில் இரவு ரோந்து செல்ல உத்தரவிட்டுள்ளார். திருட்டு சம்பவங்கள் நடக்கும் பகுதிகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

Tags : public ,theft ,
× RELATED வாக்குப்பதிவு நடைபெறும் இன்று வெப்ப...