×

பென்னாத்தூரில் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் துவக்க விழா கிராமத்திலிருந்து நல்ல விஷயங்களையும், வாழ்க்கை முறையையும் கற்றுக்கொள்ளுங்கள்

விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன் பேச்சு



வேலூர், பிப்.18:கிராமத்திலிருந்து நல்ல விஷயங்களையும், வாழ்க்கை முறையையும் கற்றுக்கொள்ளங்கள் என்று பென்னதாத்தூரில் நடந்த நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் தொடங்க விழாவில் விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன் பேசினார்.வேலூர் அடுத்த கணியம்பாடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 24 கிராமங்களில் விஐடி சார்பில் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் பிப்ரவரி நேற்று முதல் வரும் 23ம் தேதி வரை 7 நாட்கள் நடைபெறுகிறது. முகாம் தொடக்கவிழா பென்னாத்தூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி நடந்தது. முகாமை விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன் தொடங்கி வைத்து பேசியதாவது:விஐடி நாட்டுநலப்பணி திட்ட முகாமில் தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, பீகார், உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா, உட்பட பல்வேறு மாநில மாணவர்களும் எத்தியோப்பியாவை சேர்ந்த மாணவர்களும் பங்கு பெறுகின்றனர்.கணியம்பாடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 10 அரசு பள்ளிகள், 24 கிராமங்கள் இருக்கிறது, இதில் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் தங்களால் இயன்ற உதவிகளையும் சேவைகளையும் செய்ய உள்ளனர்.இந்தியாவில் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. நானும் குக்கிராமத்திலிருந்து வந்தவன் தான், கிராமத்து மாணவர்கள் யாரும் ஆங்கிலத்தை கண்டு பயப்பட வேண்டாம் சற்று அதிக நேரம் செலவு செய்தால் ஆங்கிலத்தை சுலபமாக கற்றுக் கொள்ளலாம். கிராமத்திலுள்ள வாழ்க்கை முறையையும் பல நல்ல விஷயங்களையும் நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.

அதேபோல் நாமும் அவர்களுக்கு நல்ல விஷயங்களை கற்றுக் கொடுக்க வேண்டும். இந்தியா விவசாயம் சார்ந்த பூமி விவசாயத்தை நாம் பாதுகாக்க வேண்டும். விவசாயிகளுக்கு தேவையான உதவிகளை நாம் செய்ய வேண்டும். வேலூர் மாவட்டம் ஒரு காலத்தில் விவசாயம் செழிப்பாக இருந்த காலம், அதிலும் 500க்கும் மேற்பட்ட வெல்ல மண்டிகள் இருந்தன ஆனால் தற்போது இல்லை. விவசாயி தற்கொலைகளை நாம் தடுக்க வேண்டும், விவசாயம் செழிக்க இளைஞர்கள் முன்வர வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.முன்னதாக விஐடி நாட்டுநலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயகிருஷ்ணன் முகாம் பணியினை விரிவாக எடுத்துக் கூறினார். பேராசிரியர் ஆஷா அனைவரையும் வரவேற்றார். விஐடி பதிவாளர் கே. சத்தியநாராயணன், மாணவர் நலன் இயக்குனர் அமித் மகேந்திரகர், கணியம்பாடி ஒன்றியத்தின் முன்னாள் ஒன்றிய குழுத்தலைவர் ராகவன், பென்னாத்தூர் முன்னாள் தலைவர் அருளநாதன், பென்னாத்தூர் முன்னாள் துணைத்தலைவர் ராஜா, மாணவ மாணவிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பேராசிரியர் பெஞ்சுலாஅன்புமலர் நன்றி கூறினார்.

Tags : village ,Pennathur ,camp launching ceremony ,
× RELATED கடலூர் அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை...