×

தாணுலிங்க நாடார் பிறந்தநாள் விழா நாகர்கோவிலில் இந்து முன்னணி பைக் ஊர்வலம்

தென்தாமரைக்குளம், பிப்.18 :தாணுலிங்க நாடாரின், பிறந்தநாள் விழாவையொட்டி நாகர்கோவிலில் நேற்று இந்து முன்னணி சார்பில் பைக் ஊர்வலம் நடைபெற்றது.இந்து முன்னணி நிறுவன தலைவர் தாணுலிங்க நாடாரின் 105 வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி குமரி மாவட்ட இந்து முன்னணி சார்பில் நாகர்கோவில் நாகராஜா திடலில் இருந்து தாணுலிங்க நாடார் நினைவிடம் அமைந்துள்ள பொற்றையடி வரை பைக் ஊர்வலம் நடந்தது. இந்து முன்னணி மாநில அமைப்பாளர் பக்தன் ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். இந்து முன்னணி மாநில பொது செயலாளர் அரசு ராஜா கொடியேற்றி வைத்தார். முன்னாள் எம்.எல்.ஏ. வேலாயுதம், இந்து முன்னணி மாவட்ட தலைவர் மிசா சோமன், மாவட்ட பொது செயலாளர் ஆர்.கே. கண்ணன், நெல்லை கோட்ட தலைவர் தங்க மனோகர், கோட்ட செயலாளர் சக்திவேலன், மாநில பேச்சாளர் வழக்கறிஞர் அசோகன், மாவட்ட செயலாளர் நம்பிராஜன், மாநகர பொது செயலாளர் மகாராஜா, பா.ஜ. மாவட்ட துணைத்தலைவர் முத்துராமன், பா.ஜ. நிர்வாகிகள் தேவ், ராஜன், மீனாதேவ், உமாரதி, நாகராஜன், வி.எச்பி. தென் தமிழக மாநில இணை செயலாளர் காளியப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஊர்வலத்தில் 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்றனர்.

 இந்த ஊர்வலம் கோட்டாறு, சுசீந்திரம் வழியாக பொற்றையடியில் உள்ள நினைவிடத்தை அடைந்தது. பின்னர் கருத்தரங்கம் நடந்தது. இதில் பா.ஜ. மூத்த தலைவர் எம்.ஆர். காந்தி, குமரி மாவட்ட பா.ஜ. தலைவர் தர்மராஜ், அய்யா வழி சிவச்சந்திரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இந்து முன்னணி முன்னாள் மாவட்ட செயலாளர் நாஞ்சில் ராஜா,  பிள்ளையார்புரம் சிவந்தி ஆதித்தனார் கல்லூரி செயலாளர் ராஜன், தலைவர் காமராஜ், அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய பா.ஜ. தலைவர் சவுந்தர்ராஜன், விவசாய அணி துணைத்தலைவர் பெரியசுவாமி, ஒன்றிய செயலாளர் சுபாஷ் விஜயன் உட்பட பலர் கலந்து கொண்டனர். புஷ்பாஞ்சலி நிகழ்ச்சியும், தீப வழிபாடு மற்றும் பிரார்த்தனை நடைபெற்றது.  மாவட்ட துணைத்தலைவர் ராஜேஸ்வரன் நன்றி கூறினார்.

Tags : Tanu Linga Nadar Birthday Celebration ,
× RELATED ‘வைப்புநிதி உங்கள் அருகில்’ விழிப்புணர்வு நிகழ்ச்சி