ஆவடி அருகே மாயமான வாலிபர் மர்மச்சாவு

ஆவடி, பிப். 18: ஆவடி அடுத்த மேலப்பேடு, பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (29). கூலி தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவர் தனது நண்பர்களுடன் வீடு எடுத்து தங்கி வேலை செய்து வந்தார். இதற்கிடையில் கடந்த 15ம்தேதி கோவிந்தராஜ் வீட்டை விட்டு வெளியே சென்றார். பின்னர், அவர் வீடு திரும்பவில்லை. இதனை அடுத்து, அவரை நண்பர்கள் பல இடங்களிலும் தேடி உள்ளனர். இருந்த போதிலும், அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்நிலையில் நேற்று காலை அதே பகுதி பொங்கலாம்  குளத்தில் கோவிந்தராஜ் சடலமாக மிதந்து கொண்டிருந்தார். இதனை  பொதுமக்கள் பார்த்து முத்தாபுதுப்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.சம்பவ இடத்திற்கு போலீசார் சென்று  சடலத்தை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும்,  போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவிந்தராஜின் மர்மச்சாவு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>