×

பழவேற்காட்டில் கடலோர பிரசார பயணம் தொடக்கம்

பொன்னேரி, பிப். 18: பொன்னேரி அடுத்த பழவேற்காடு பஜாரில், ஏஐடியுசி சங்கம் சார்பில், மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கடலோர பிரசார பயண துவக்க விழா நடைபெற்றது. இந்த விழாவுக்கு ஏஐடியுசி மாநில துணைத் தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான ஏ.எஸ்.கண்ணன் தலைமை தாங்கினார். மாநில பொது செயலாளர் மூர்த்தி, மாநில பொறுப்பாளர் கருணாநிதி முன்னிலை வகித்தனர். நெய்தவாயல் ஊராட்சி மன்ற தலைவர் பாலன் வரவேற்றார்.இதில், பழவேற்காடு முகத்துவாரம் பகுதியில் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும். பழவேற்காடு முதல் எண்ணூர் வரை கடற்கரை ஓரங்களில் உள்ள பல்வேறு நிறுவனங்களில் இருந்து கழிவுநீர் வெளியேறுவதை தடுக்க வேண்டும். கப்பல் கட்டும் தளம் விரிவாக்கப் பணிக்காக நிலம் கையகப்படுத்துவதை தடுக்க வேண்டும். கடற்கரை ஓரத்தில் வாழும் மீனவ மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் நிர்வாகிகள் கருணாநிதி, ஜோதி மாரியப்பன், பாஸ்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Tags : propaganda journey ,Pulicat ,
× RELATED பழவேற்காடு ஏரியில் 2 பெண்கள் சடலம் மீட்பு : கொலையா? போலீஸ் விசாரணை