×

துப்பாக்கி சுடும் பயிற்சிக்கு செல்வதாக கூறி 2வது திருமணம் செய்த கில்லாடி காவலர்

சென்னை, பிப். 18: துப்பாக்கி சுடும் பயிற்சிக்கு செல்வதாக கூறி 2வது திருமணம் செய்து மோசடி செய்த காவலர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் முதல் மனைவி புகார் அளித்துள்ளார்.சென்னை திருமங்கலம் ராஜாஜி தெருவை சேர்ந்த சத்தியவாணி (27) என்பவர், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:சிவகங்கை மாவட்டம், பாகனேரி அருகே உள்ள கொட்டாப்பட்டி கிராமத்தை ேசர்ந்த நான், மேலப்பூவந்தி கிராமத்தை சேர்ந்த வேறு சாதியை சேர்ந்த ராஜா என்பவரை காதலித்தேன். அவரது பெற்றோர் எங்களது திருமணத்துக்கு சம்மதம் தெரிவிக்காததால், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன், நண்பர்கள் மற்றும் எனது சகோதரர்கள் முன்னிலையில் வடபழனி முருகன் கோயிலில் திருமணம் செய்து ெகாண்டேன்.குழந்தை பிறந்தவுடன் சொந்த ஊருக்கு செல்லலாம் என்று ராஜா கூறியதால், திருமங்கலத்தில் கடந்த 2 வருடங்களாக வசித்து வந்தோம். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் 11வது பட்டாலியன் சிறப்பு காவல் படையில் காவலராக பணியாற்றி வந்த எனது கணவர் ராஜா, தற்போது சென்னையில் பணியாற்றி வருகிறார்.

எங்களுக்கு கடந்த 11.6.2019ம் தேதி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. ஆனால் உடல் நிலை சரியில்லாமல் குழந்தை 6வது நாளில் இறந்துவிட்டது. இதற்கிடையே 45 நாள் காவல் துறையில் துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்திற்கு செல்வதாக கூறி சென்ற கணவர் ராஜா, அதன்பிறகு வீடு திரும்பவில்லை. செல்போனில் தொடர்பு கொண்டபோதும் பதிலளிக்கவில்லை. இதுபற்றி விசாரித்தபோது, அவர் பெற்றோர் சம்மதத்துடன் உறவுக்கார பெண் ஒருவரை 2வது திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது.இதையடுத்து, கணவர் ராஜாவை நேரில் சந்தித்து இதுபற்றி கேட்டபோது, உரிய பதில் இல்ைல. இதனால் அதிர்ச்சியடைந்த நான், சம்பவம் குறித்து திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 2.11.2019ம் தேதி புகார் அளித்தேன். ஆனால் எனது புகார் மீது இன்று வரை வழக்கு பதிவு செய்ய வில்லை. போலீசார் இன்று வா, நாளை வா என்று அலைக்கழிக்கின்றனர்.எனவே, என்னை காதல் திருமணம் செய்து ஏமாற்றி விட்டு, 2வது திருமணம் செய்த காவலர் ராஜா மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், நான் கொடுத்த புகார் மீது, திருமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்ய போலீஸ் கமிஷனர் உத்தரவிட வேண்டும்.



Tags : 2nd Guild Guardsman ,
× RELATED வெயிலில் சுருண்டு விழுந்து ஆடு மேய்த்தவர் பரிதாப பலி