×

தலித் சேனா அமைப்பு செயற்குழுக் கூட்டம்

காஞ்சிபுரம், பிப்.18: அகில இந்தியா தலித் சேனா அமைப்பின் மாநில, மாவட்ட தலைவர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் கூட்டம் சென்னை பல்லாவரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.தலித்சேனா மாநில தலைவர் சத்தியசீலன் தலைமை தாங்கினார். தேசிய தலித் சேனா பொதுச் செயலாளர்கள் சூரியமணி பிகடே, திருஞானம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். கூட்டத்தில் தலித்சேனா அமைப்பின் வளர்ச்சி, மத்திய அரசு எஸ்சி - எஸ்டி இட ஒதுக்கீடு, மத்திய, மாநில அரசு கல்வி மற்றும் வேலைவாய்ப்பு, தனியார் துறையில் இட ஒதுக்கீடு தொடர்ந்து வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொழிலதிபர் சந்திரகேசவன், நிர்வாகிகள் லெனின். நதிப்பிரகாசம், வழக்கறிஞர் தமிழ்ச்செல்வன், ஜெயப்பிரகாஷ், வெங்கடேஷ், கிருஷ்ணமூர்த்தி, விஜயகுமார், புகழேந்தி, விஜய், சமுத்திரராஜன், சரவணன், சங்கர், குமார், சாரதி, செல்வராஜ், சண்முகம், சீனிவாசன் உள்பட 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : Dalit Sena Executive Committee Meeting ,
× RELATED மதுராந்தகம் ஒன்றியம் அரியனூர்...