×

நாமக்கல்லில் திருக்குறள் சிந்தனை அரங்கம்

நாமக்கல், பிப்.17:நாமக்கல்லில், கவிஞர் சிந்தனை பேரவை சார்பில் திருக்குறள் சிந்தனை அரங்கம் நடந்தது. நாமக்கல்லில், கவிஞர் சிந்தனை பேரவை சார்பில், நேற்று திருக்குறள் சிந்தனை அரங்கம், கம்பன் கழக தலைவர் சத்தியமூர்த்தி தலைமையில் நடந்தது. நூலகர் செல்வம் வரவேற்று பேசினார். கவிஞர் இல்ல நூலக வாசகர் வட்ட தலைவர் மோகன் முன்னிலை வகித்து பேசினார். சிந்தனை அரங்கத்தை, மாவட்ட நூலக அலுவலர் ரவி தொடங்கி வைத்து பேசினார்.

இதில் தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி, கற்க அதற்கு தக என்ற தலைப்பில் பேசினார். நாமக்கல் முத்தமிழ் மன்ற நிர்வாக நடேசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் திருவள்ளுவர் விருது வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், மாவட்ட மைய நூலக வாசகர் வட்ட ஆலோசகர் ஜோதிலிங்கம், தலைவர் ராசாக்கவுண்டர், பசுமை நாமக்கல் அமைப்பு செயலாளர் தில்லை சிவக்குமார், திருக்குறள் பேரவை தலைவர் சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Thirukkural Thinking Hall ,Namakkal ,
× RELATED நாமக்கல் பகுதியில் கோழிப்பண்ணைகளில்...