×

நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடு

நாமக்கல், பிப்.17:  நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடு நடைபெறுவதாக தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் நாமக்கல்லில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழகத்தில் உள்ள அரசு நெல் கொள்முதல் நிலையங்களில், விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய இடைத்தரகர்கள் மூலம் 40 கிலோ சிப்பத்திற்கு ₹40 லஞ்சம் வாங்கப்படுகிறது. இந்த முறைகேடுக்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். விவசாயிகள் பாதிக்கப்படாத வகையில் அரசின் நடவடிக்கை இருக்கவேண்டும்.  

பனை பொருட்களின் முக்கியத்துவத்தை தற்போது தமிழக மக்கள் உணரத் தொடங்கி உள்ளனர். தமிழக அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டிடில் கள்ளுக்கான தடை நீக்கம் தொடர்பான அறிவிப்பு வரும் என  எதிர்பார்த்து காத்திருந்தோம். ஆனால், ஏமாற்றமே மிஞ்சியது. தமிழகத்தில் படிப்படியாக மதுக்கடைகளை மூடிவிட்டு கள் இறக்க அனுமதி அளிக்கவேண்டும். இவ்வாறு நல்லசாமி தெரிவித்தார். 

Tags : paddy purchasing centers ,
× RELATED நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில்...