×

பாவை கல்லூரியில் தேசிய அளவிலான பிஸ்ட்பால் போட்டி

ராசிபுரம், பிப்.17:  பாவை கல்லூரியில் தேசிய அளவிலான சீனியர் பிஸ்ட்பால் போட்டி நடைபெற்றது. போட்டியின் துவக்க விழாவிற்கு பாவை கல்வி நிறுவனங்களின் தலைவர் நடராஜன் தலைமை வகித்தார். பாவை கல்லூரியின் இயக்குனர் ராமசாமி, பிஸ்ட்பால்  அசோசியேசன் செயலாளர் பாலவிநாயகம், துணைத் தலைவர் அழகேசன் உள்ளிட்ட பலர்  கலந்து கொண்டனர். இப்போட்டியில் தமிழ்நாடு, கர்நாடகா, ராஜஸ்தான், பஞ்சாப், புதுச்சேரி, கேரளா, அருணாசலபிரதேசம், வெஸ்ட்பெங்கால், மத்தியபிரதேசம், கர்நாடகா உள்ளிட்ட 16 மாநிலங்களிலிருந்து ஆண், பெண்கள் அணிகள் கலந்து கொண்டு விளையாடியது. போட்டியின் முதல் நாளில் ஆண்கள் அணியில், கர்நாடகா அணியை வீழ்த்தி, தமிழ்நாடு அணி வெற்றி பெற்றது. மற்றொரு போட்டியில், ராஜஸ்தான் அணியை வீழ்த்தி கர்நாடக அணி வெற்றி பெற்றது. அதேபோல், கேரளா அணியை புதுச்சேரி அணியும், மத்திய பிரதேச அணியை வெஸ்ட்பெங்கால் அணியும் வீழ்த்தி வெற்றி பெற்றன. மேலும், சத்தீஸ்கர் அணியை கர்நாடகா அணி வீழ்த்தியது.

இதேபோல பெண்கள் பிரிவில், ஜார்கண்ட் அணியை வீழ்த்தி தமிழ்நாடு அணியும், ஜார்கண்ட் அணியை கேரளா அணியும் வீழ்த்தி வெற்றி பெற்றன.
பாவை கல்லூயில் நடந்த தேசிய அளவிலான 3வது சீனியர் பிஸ்ட்பால் போட்டியின் அரையிறுதியில், ஆண்கள் பிரிவில் தமிழ்நாடு, புதுச்சேரி, கேராளா, மேற்குவங்கம் அணிகளும், பெண்கள் பிரிவில் தமிழ்நாடு, கேரளா, சட்டீஸ்கர், புதுச்சேரி அணிகளும் மோதின.  இறுதிப் போட்டி ஆண்கள் பிரிவில்  தமிழ்நாடு- புதுச்சேரி அணி மோதியதில் புதுச்சேரி அணி வெற்றி பெற்றது. மகளிர் பிரிவில் தமிழ்நாடு- கேராள அணி மோதியதில் தமிழ்நாடு  அணி  வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கும், சிறந்த ஆட்டக்காரர்களுக்கும் பரிசு வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

Tags : level pistol competition ,Pawai College ,
× RELATED பாவை கலை அறிவியல் கல்லூரியில் மாணவிகளை ஊக்குவித்தல் நிகழ்ச்சி