×

திருச்செங்கோட்டில் சிறப்பு மருத்துவ முகாம்

திருச்செங்கோடு, பிப்.17:  பொது சுகாதாரம், நோய் தடுப்பு மருந்து துறை சார்பில், திருச்செங்கோட்டில் சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் இயற்கை உணவு கண்காட்சி நடைபெற்றது. திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் சார்பில், நாமக்கல் எம்பி சின்ராஜ்  சிறப்பு நிதியின் கீழ் நேற்று மருத்துவ முகாம் நடைபெற்றது. கலெக்டர் மெகராஜ் துவக்கி வைத்தார். சின்ராஜ் எம்.பி. முன்னிலை வகித்தார். முகாமில் சிறப்பு பொது மருத்துவம், கண் மருத்துவம், பல் மருத்துவம், வாய் புற்றுநோய் கண்டறிதல், தோல் மருத்துவம், காது -மூக்கு -தொண்டை  மருத்துவம்,  குழந்தைகள் மருத்துவம், எலும்பு சிகிச்சை, தாய் -சேய் நல சிறப்பு மருத்துவம், சித்த  மருத்துவம் ஆகிய பிரிவுகளுக்கு தனித்தனியே அறைகள் ஒதுக்கப்பட்டு  துறை சார்ந்த சிறப்பு டாக்டர்கள்  சிகிச்சை மற்றும் ஆலோசனைகளை  வழங்கினர்.

இந்த முகாமில் உடல் எடை கண்டறிதல், ரத்த அழுத்த பரிசோதனை, இ.சி.ஜி. ஸ்கேன் பரிசோதனை, ரத்தம், சிறுநீர் ஆய்வக பரிசோதனை, கர்ப்பப்பை மற்றும்  மார்பக புற்றுநோய் பரிசோதனை ஆகியவை நடந்தன. சித்த மருத்துவ பிரிவில் பல்வேறு நோய்களை தீர்க்கும் மூலிகைகள், உணவே மருந்து என்ற அடிப்படையிலான அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் மூலிகை வகைகள், கீரை வகைகள் குறித்த கண்காட்சியும் நடைபெற்றது. நிகழ்ச்சியில், திருச்செங்கோடு ஆர்டிஓ.மணிராஜ், திருச்செங்கோடு ஒன்றியக்குழு தலைவர் சுஜாதா, துணைத்தலைவர் ராஜவேலு,  சுகாதார பணிகள் இணை இயக்குனர் டாக்டர் சாந்தி, துணை இயக்குனர் டாக்டர் சோமசுந்தரம், சேலம் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் செல்வகணபதி,

கொமதேக மாவட்ட செயலாளர் நதிராஜவேல், திமுக நகர செயலாளர் கார்த்திகேயன், ஒனறிய செயலாளர்கள் செல்வராஜ், தங்கவேல், மாவட்ட இளைஞரணி  அமைப்பாளர் மதுரா செந்தில் மற்றும்  உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், கூட்டுறவாளர்கள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags : Special Medical Camp ,Tiruchengode ,
× RELATED நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னேற்பாடுகள் தீவிரம்