×

போச்சம்பள்ளி அருகே 7 மாத பெண் குழந்தை திடீர் சாவு

போச்சம்பள்ளி, பிப்.17: போச்சம்பள்ளி அருகே பண்ணந்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித்(21). பெங்களூருவில் கட்டிட வேலை செய்து வரும் இவரது மனைவி கற்பகம்(20). இவர்களுக்கு 7 மாதத்திற்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு ஈசாஸ்ரீ என பெயரிட்டிருந்தனர். இந்நிலையில், சளி மற்றும் மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு பல்வேறு இடங்களில் சிகிச்சை அளித்து வந்தனர். நேற்று முன்தினம் மூச்சு திணறல் அதிகரிக்கவே குழந்தையை தூக்கிக் கொண்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு விரைந்தனர்.

அங்கிருந்த டாக்டர்கள் பரிசோதித்து பார்த்து விட்டு குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின்பேரில், பாரூர் போலீசார் விரைந்து சென்று குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், ஒரு வழக்குப்பதிந்து குழந்தையின் உயிரிழப்பிற்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

Tags : baby ,Pochampally ,
× RELATED தொண்டையில் கடலை சிக்கி குழந்தை பலி