×

சென்னை தடியடியை கண்டித்து ஆர்ப்பாட்டம்

சிவகாசி, பிப்.17: குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும், சென்னை வண்ணாரப்பேட்டையில் காவல்துறை நடத்திய தடியடியை கண்டித்தும் சிவகாசியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நகர செயலாளர் இக்பால் தலைமை வகித்தார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட அமைப்பாளர் இப்ராஹிம் முன்னிலை வகித்தார். கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட பொருளாளர் சமுத்திரம், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட பொறுப்பாளர் அஜ்மீர்கான் விளக்க உரையாற்றினார்கள். ஆர்ப்பாட்டத்தில் சிவகாசி வட்டார செயலாளர் ஜீவா, மாவட்ட குழு விஜயராமன், ஏஐடியுசி லோடுமேன் சங்கத் செயலாளர் முனியசாமி உட்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : Demonstration ,Chennai ,
× RELATED பஞ்சாயத்து ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்