×

விருதுநகர் அருகே ஓடையில் கொட்டப்படும் குப்பையால் நோய் அபாயம்

விருதுநகர், பிப். 17: விருதுநகர் அருகே ஓடையில் கொட்டப்படும் குப்பையால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. விருதுநகர் அருகே பாவாலி ஊராட்சிக்கு உட்பட்ட அய்யனார் நகரில் ஆயிரத்திற்கும் அதிகமான குடியிருப்புகள் உள்ளன. இங்கு அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. குப்பை கொட்டுவதற்கான குப்பை தொட்டி போதுமானதாக இல்லாத நிலையில், குப்பை தொட்டியில் கொட்டும் குப்பைகளை முறைப்படி ஊராட்சி நிர்வாகம் அகற்றுவதில்லை. இதனால் பொதுமக்கள் ரோட்டோரம் உள்ள நீர்வரத்து ஓடையில் குப்பைகளை கொட்டி வருகின்றனர். பொதுமக்கள் குப்பை தொட்டியில் கொட்டும் குப்பைகளை ஊராட்சி நிர்வாகம் ஓடையில் கொட்டி வருகிறது. இதனால் அய்யனார் நகர் நீர்வரத்து ஓடையில் குப்பை கழிவுகள், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்து கிடக்கின்றன.

மேலும் ஊராட்சி குடியிருப்புகளின் கழிவுநீர் ஓடையில் விடப்படுவதால் துர்நாற்றம் வீசுகிறது. கழிவுநீரும், குப்பையும் தேங்கி கிடப்பதால் சுகாதார கேடு உருவாகி உள்ளது. பன்றிகள் நடமாட்டம் அதிகம் இருப்பதால் தொற்றுநோய் பரவும் அபாயம் உருவாகி உள்ளது. பாவாலி ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து அய்யனார் நகர் ஓடையில் குப்பை கழிவுகளை முழுமையாக அப்புறப்படுத்த வேண்டும். தினசரி சேரும் குப்கைகளை முறையாக அகற்ற வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : streams ,Virudhunagar ,
× RELATED பொதுமக்கள் பாராட்டு கறம்பக்குடி...