×

விருதுநகர் மாவட்டத்தில் 13 பிடிஓக்கள் அதிரடி மாற்றம்

விருதுநகர்,பிப்.17: விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 20 தாசில்தார்கள் இடமாறுதல் செய்யப்பட்ட நிலையில், நேற்று 13 வட்டார வளர்ச்சி அலுவலர்களையும் கலெக்டர் கண்ணன் இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார். மாறுதல் செய்யப்பட்ட பிடிஓக்கள்: சாத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்(கி.ஊ) சத்தியவதி ராஜபாளையம் ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர்(கி.ஊ), ராஜபாளையம் செல்வராஜ் காரியாபட்டி ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர்(கி.ஊ), காரியாபட்டி மாரியம்மாள் விருதுநகர் ஊராட்சிகள் உதவி இயக்குநர் அலுவலக கண்காணிப்பாளராகவும், விருதுநகர் உதவி இயக்குநர் அலுவலக சங்கரநாராயணன் விருதுநகர் உதவி இயக்குநர் தணிக்கை அலுவலக கண்காணிப்பாளராக மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.
ராஜபாளையம் ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் ராமமூர்த்தி சிவகாசி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலராகவும், சிவகாசி ஊராட்சி சிவக்குமார் ராஜபாளையம் ஊராட்சி வட்டாரவளர்ச்சி அலுவலராகவும்,

வெம்பக்கோட்டை ஊராட்சி நாகராஜ் வத்திராயிருப்பு வட்டார வளர்ச்சி அலுவர்(கி.ஊ), வத்திராயிருப்பு ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர்(கி.ஊ) ராஜசேகரன் விருதுநகர் வட்டார வளர்ச்சி அலுவலராக மாறுதல் செய்யப்பட்டுள்ளனர். விருதுநகர் ஊராட்சி காஜா மைதீன் பந்தே நவாஸ் சாத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்(கி.ஊ), சாத்தூர் ஊராட்சி மகேஸ்வரன் வத்திராயிருப்பு வட்டார வளர்ச்சி அலுவலராகவும், வத்திராயிருப்பு ஊராட்சி ரவி சிவகாசி வட்டார வளர்ச்சி அலுவலர்(கி.ஊ), சிவகாசி ஊராட்சி வெள்ளைச்சாமி வெம்பக்கோட்டை ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலராகவும், வெம்பக்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர்(கி.ஊ)சிவக்குமார் வெம்பக்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலராக இடமாறுதல் செய்து உத்தரவிட்டுள்ளார்.

Tags : Virudhunagar district ,
× RELATED விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே...