×

சிவகாசி ரோடுகளை விரைவாக போடுங்க மந்திரி இருக்காரா, மாடுமேய்க்க போய்ட்டாரான்னு கேக்குறாங்க

விருதுநகர்,பிப்.17: `` சிவகாசி, திருத்தங்கல், ராஜபாளையம் ரோடுகளை எல்லாம் விரைவாக போடுங்க. மந்திரி இருக்கறா இல்லை மாடுமேய்க்க போய்ட்டாரான்னு கேக்குறாங்க, நானும் அந்த பக்கமா போகமா சுத்தி, சுத்தி போறேன்னு’’ என்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி ஆய்வு கூட்டத்தில் அதிகாரிகளிடம் வேதனையை வெளிப்படுத்தினார். விருதுநகரில் புதிய மருத்துவ கல்லூரி அடிக்கல் நாட்டுவிழாவில் பங்கேற்க மார்ச் 1ல் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வருகை தர உள்ளார். இது தொடர்பான அரசு அதிகாரிகள் ஆய்வுக் கூட்டம் நேற்று முன்தினம் மாலை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், சீவலப்பேரி கூட்டுக்குடி நீர் திட்டம் 2010ல் அறிவிக்கப்பட்டதாக குடிநீர் திட்ட அதிகாரி தெரிவித்தார். உடனே குறுக்கிட்ட அமைச்சர்,`` அது வாய்மொழி அறிவிப்பாக இருந்தது. 2011ல் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும் அரசாணை வெளியிடப்பட்டது. சாத்தூர், சிவகாசி, வெம்பக்கோட்டை, விருதுநகர் ஒன்றியங்களில் 755 ஊரக கிராமங்களுக்கான சீவலப்பேரி கூட்டுக்குடி நீர் திட்டடபபடிண 9 வருஷமாக நடந்து வருகிறது.

இவ்வளவு தாமதமாக எந்த கூட்டுக்குடி நீர் திட்டமும் நாட்டில் நடக்கவில்லை. போனவாரம் 30 கிராமங்களுக்கு தண்ணீர் போகலன்னு சொன்னீங்க. இன்னைக்கு 16 ரோட்டை தோண்டியதால 86 ஊர்களுக்கு போகலன்னு சொல்றீங்க. இப்படி சொன்னால், எப்படி முதல்வர் திறந்து வைத்த மறுநாள் தண்ணீர் போகலைன்னா, மக்கள் அசிங்கமா பேசுவான். அதனால் ரோடு சரியில்ல, தண்ணீர் போகலன்னு சொல்லக்கூடாது. விரைவாக தண்ணீர் போகனும் என்றார். சாத்தூர், ராஜபாளையம், திருத்தங்கல் நகராட்சிகளில் பாதாளச்சாக்கடை திட்டம், குடிநீர் குழாய் பதிக்கும் திட்டங்களால் ரோடுகள் குண்டும், குழியுமாக இருப்பது தொடர்பாக நகராட்சி அதிகாரிகள், குடிநீர்வாடிகால் திட்ட அதிகாரிகள், பாதளாச்சாக்கடை ஒப்பந்தகாரர்கள் கூட்டத்தில் ஒருவரை, ஒருவர் குறை கூறி தப்பிக்க முயன்றனர். திருத்தங்கல் அதிகாரி ஒருவர், உங்க வீட்டு ரோடும் இன்னும் போடல என்றார்.

அதற்கு அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, `` ஏம்பா ஏன் வீட்டு ரோடுன்னு சொல்ற? அந்த ரோட்டுக்கு வேற அடையாளமே இல்லையா? என்னை மக்கள் வையவா? 3 நகராட்சிகளில் பாதளாச்சாக்கடை, குடிநீர் திட்ட பணிகளால் ரோடுகள் குழியாக இருக்குது. சிவகாசியில் பள்ளி குழந்தைகள் செல்லும் ரோடு குழியாக இருக்குது, மந்திரி இருக்காரா? இல்லை... மாடு மேய்க்க போய்ட்டாரான்னு பிள்ளைக தண்ணீல போறத படம் பிடிச்சி டிவியில எல்லாம் போட்டு கேவலப்படுத்துறாங்க. முதலாளிமார் முதல் எல்லாரும் என்னைய வையுறாங்க. அதனால அந்த பக்கமா போகமா சுத்தி, சுத்திப் போறேன்’’ என்று அமைச்சர் வேதனை தெரிவித்தார்.

Tags : Sivakasi ,roads ,Minister ,
× RELATED ஓட்டுப்பதிவு இயந்திரம்...