×

கல்லூரி மாணவியர் விடுதி விழா

தேனி, பிப். 17: தேனி நாடார் சரசுவதி கலை, அறிவியல் கல்லூரியில் விடுதி விழா நடந்தது. தேனி அருகே வடபுதுப்பட்டியில் உள்ள தேனி நாடார் சரசுவதி கலை, அறிவியல் கல்லூரி வளாகத்தில் விடுதி விழா நடந்தது. விழாவிற்கு தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை தலைவர் முருகன் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் ராஜமோகன், பொருளாளர் பழனியப்பன் முன்னிலை வகித்தனர். விடுதிச் செயலாளர் சேகர் வரவேற்றார். கல்லூரி முதல்வர் சித்ரா ஆண்டறிக்கையை சமர்பித்தார்.

விழாவில் மாவட்ட வழங்கல் அலுவலர் கார்த்திகாயினி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதில், கல்லூரி செயலாளர் காளிராஜ், தேனி நாடார் சரசுவதி பொறியியல் கல்லூரி செயலாளர் காசிபிரபு ஆகியோர் வாழ்த்தி பேசினர். விழாவில் விடுதி மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. முடிவில் விடுதி உதவிக் காப்பாளர் கீர்த்திகா நன்றி கூறினார்.

Tags : College Student Hostel Festival ,
× RELATED உடல் தானம் செய்தவருக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு