×

கொட்டக்குடி கிராமத்தில் செயல்படாத சேவை மையத்திற்கு பேவர் பிளாக் சாலை ஏன்?

போடி, பிப். 17: கொட்டக்குடி கிராமத்தில் செயல்படாமல் காட்சிப் பொருளாக இருக்கும் சேவை மையத்தில், ஏன் பேவர் பிளாக் கற்கள் பதித்து சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். 7 ஆண்டாக பயன்பாடில்லாமல் கிடக்கும் சேவை மையத்தை விரைந்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். போடி அருகே, கொட்டக்குடி மலைக்கிராமம் உள்ளது. இங்கு கடந்த 2013ல் ரூ.13.12 லட்சத்தில் சேவை மையம் அமைக்கப்பட்டது. ஆனால், சேவை மையத்திற்கான உபகரணங்கள் இல்லை. மேலும், சேவை மையம் குறித்த விழிப்புணர்வும் பொதுமக்களிடம் இல்லை. பஞ்சாயத்து நிர்வாகமும், சேவை மையத்தை பயன்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால், கடந்த 7 ஆண்டுகளாக காட்சிப் பொருளாக உள்ளது. இந்நிலையில், சேவைய மையத்தில் வாசல் மற்றும் வெளிப்புறப் பகுதிகளில் பேவர் பிளாக் பதித்து சாலை அமைக்கும் பணி நடந்து வந்தது. தற்போது அந்தப் பணிகளும் அரைகுறையாக கிடக்கிறது. இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘கடந்த 7 ஆண்டுகளாக கிராமத்தில் சேவை மையம் பயன்பாட்டுக்கு வராமல் காட்சிப் பொருளாக உள்ளது. ஆனால், தற்போது பேவர் பிளாக் கற்கள் பதித்து சிமெண்ட் சாலை அமைக்கின்றனர். விரைவில் சேவை மையத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும்.

Tags : Beaver Block Road ,village ,Kottakkudi ,service center ,
× RELATED கடலூர் அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை...