×

நகராட்சி, பேரூராட்சிகளில் புதிய வாக்காளர் பட்டியலை வார்டு வாரியாக பிரிக்க உத்தரவு தேர்தல் தாமதமாக வாய்ப்பு

தேவாரம், பிப். 17: தேனி மாவட்டத்தில் சமீபத்தில் வெளியிடப்பட்ட புதிய வாக்காளர் பட்டியலை, வார்டு வாரியாக பிரிக்க உத்தரவிடப்பட்டுள்ளதால், நகராட்சி, பேரூராட்சிகளின் தேர்தல் தாமதமாக வாய்ப்புள்ளது என தெரிவிக்கின்றனர். தேனி மாவட்டத்தில் தேனி, கம்பம் உள்ளிட்ட 6 நகராட்சிகள், உத்தமபாளையம், தேவாரம் உள்ளிட்ட 22 டவுன் பஞ்சாயத்துக்கள் உள்ளன. இவைகளுக்கு, உள்ளாட்சி தேர்தல் நடத்த, வார்டு வாரியாக வாக்காளர்கள் பட்டியல் தயாரிப்பு, வாக்காளர்கள் பிரிப்பு என பல்வேறு பணிகள் நடந்தன. இதில் கிராம ஊராட்சிகளுக்கு தேர்தல் நடந்து முடிந்த நிலையில் நகராட்சி, பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடக்கும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் கட்சியினர் மத்தியில் இருந்தது. இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு புதிதாக வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதனடிப்படையில், தேர்தல் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே, இனிமேல் அனைத்து நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளின் அதிகாரிகள் இதனை வாங்கி வார்டுகள் வாரியாக பிரித்து உள்ளாட்சிகளில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்டு, இது தொடர்பான ஆட்சேபனைகளை வாங்க இன்னும் சில மாதங்கள் ஆகிவிடும். எனவே, புதிதாக வாக்காளர்கள் பட்டியலை வாங்கி அதன்பின்பு பிரிக்க சிறப்பு உத்தரவுகள், நகராட்சி ஆணையாளர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்களுக்கு பயிற்சிகள் என அனைத்தும் வழங்க வேண்டும். எனவே, இனிவரும் காலங்களில் இதற்கான சாத்தியம் உள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது குறித்து அதிகாரிகள் சிலரிடம் கேட்டபோது, ‘ஏற்கனவே பிரிக்கப்பட்ட வாக்காளர் பட்டியல் வார்டு வாரியாக தயாராக உள்ளது. இப்போது புதிதாக வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியல் அடிப்படையில்தான் வார்டு தேர்தல்கள் நடக்க வாய்ப்புகள் உள்ளன. எனவே, உயரதிகாரிகளின் உத்தரவு வந்தபின்பு இதற்கான பணிகள் தொடங்கும்’ என்றனர்.

Tags : Municipalities ,election ,ward ,
× RELATED பொதட்டூர்பேட்டை, பள்ளிப்பட்டு பேரூராட்சியில் தண்ணீர் பந்தல் திறப்பு