தேவகோட்டை வந்தது ஆதியோகி ரத யாத்திரை

தேவகோட்டை, பிப்.17:  சிவராத்திரி தினத்தன்று வெள்ளியங்கிரி ஈஷா யோகா மையம்  சார்பில் ஆதி சிவன் முன்பாக சிறப்பு பூஜைகள் விடிய விடிய நடைபெறுகிறது. ஆதியோகி ரதம் தற்போது தமிழகம் முழுவதும் சுற்றி வருகின்றது. நேற்று முன்தினம் இரவு தேவகோட்டை நகருக்கு வந்தது. நேற்று சிலம்பனி ஊரணி தென்கரையில் அமைந்திருக்கும் தர்மசாஸ்தா கோவிலில் ஆதி சிவனுக்கு குருபூஜை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சிலம்பனி சிதம்பர விநாயகர் கோவில்,

வெ.ஊரணி கலங்காத கண்ட விநாயகர் கோவில், தியாகிகள் பூங்கா, கருதாஊரணி மலைக்கோவில், யூனியன் அலுவலகம், ராம்நகர் கௌரி விநாயகர் கோவில் என நகரின் பல்வேறு பகுதிகளில் ரதம் பக்தர்களின் தரிசனத்திற்கு சென்றது. ஈஷா யோகா மைய தேவகோட்டை தன்னார்வலர்கள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் செய்திருந்தனர். தேவகோட்டை டவுன் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். 

Related Stories:

>