×

பெயரளவில் நடத்தி வருவதாக புகார்

மார்க்சிஸ்ட் ஒன்றிய செயலாளர் மதி கூறுகையில், தென்மாவட்டங்களில் தொழிற்சாலைகள் மிகவும் குறைவு. சிவகங்கை போன்ற பின் தங்கிய மாவட்டத்தில் கிராபைட் போன்ற கனிமம் கிடைக்கிறது என்றால் அதன்மூலம் மிகப்பெரிய தொழில் வளத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். கிராபைட் உப தொழிற்சாலைகளின் மூலமே ஏராளமான குடும்பங்களுக்கு வேலை கிடைக்கும். இங்கிருந்து கிராபைட்டை வாங்கி செல்லும் பிற மாநிலங்களில் கிராபைட் உப தொழில்கள் குடிசை தொழிலாக செய்யப்பட்டு வருகிறது.

உலகத்திலேயே இங்கு எடுக்கப்படும் கிராபைட் தான் தரம் வாய்ந்தது என வல்லுநர்களால் ஏற்கப்பட்டுள்ளது. ஆனால் ஆலையை விரிவுபடுத்தும் பணிகளை தமிழக அரசு செய்யவில்லை. மேலும் கனிமத்திற்கு செயற்கையான விலை குறைப்பு செய்யப்பட்டது. ஆலையை பெயரளவிலேயே நடத்தி வந்ததால் தற்போது முடக்கப்பட்டுள்ளது. உடனடியாக ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கவும், வேலைவாய்ப்பை உருவாக்கவும் தமிழக அரசும், மத்திய அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags : Complainant ,
× RELATED 11 எம்.எல்.ஏ.க்கள் மீது புகார் அளித்த 6...