×

மேலூர் அருகே சிவாலயத்தில் அஷ்டமி வழிபாடு

மேலூர், பிப். 17: விவசாயம் செழித்தோங்கவும், மழை பெய்ய வேண்டியும் சிறப்பு பிரார்த்தனைகளுடன் மேலூர் அருகே சிவாலயத்தில் அஷ்டமி வழிபாடு நடைபெற்றது. மேலூர் அருகில் உள்ள தும்பைப்பட்டி சிவாலயபுரத்தில் அமைந்துள்ள  சங்கரலிங்கம்,  சங்கரநாராயணசுவாமி, கோமதியம்மாள் கோயிலில்,  காலபைரவர் சுவாமிக்கு மாசி மாத தேய்பிறை அஷ்டமி வழிபாடு மற்றும் சிறப்பு அர்ச்சனை, அலங்கார வழிபாடு நடைபெற்றது.

மழை பெய்யவும், விவசாயம் செழிக்கவும் வேண்டி நடைபெற்ற இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை உபயதாரர் கோவை டாக்டர் சித்ரா ராஜலட்சுமி, குமார் குடும்பத்தினர், ரமேஷ் குருக்கள் மற்றும் சங்கர நாராயணர் கோயில் கல்வி, அன்னதான அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Tags : Ashtami ,Shivalaya ,Melur ,
× RELATED அஷ்டமி வழிபாடு