கடத்தூர் அருகே புதிய தார்சாலை அமைக்க பூமி பூஜை

கடத்தூர், பிப்.17: கடத்தூர் அடுத்த தென்கரைக்கோட்டை வடகரை சாலை, போதிய பராமரிப்பு இல்லாததால்  குண்டும்  குழியுமாக மாறியது. இதனால் கடந்த 5 ஆண்டுகளாக பொதுமக்கள்  சிரமப்பட்டு வந்தனர். சாலையை புதுப்பிக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை  விடுத்து வந்தனர்.  இந்நிலையில் தார்சாலையை புதுப்பிக்க  ₹89 லட்சம்  நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.  இதையடுத்து நேற்று தார்சாலை அமைப்பதற்கான  பூமி பூஜை நடந்தது. இதில் பாப்பிரெட்டிப்பட்டி எம்எல்ஏ  கோவிந்தசாமி கலந்து கொண்டு பூமி  பூஜையை தொடங்கி வைத்தார்.  இந்நிகழ்ச்சியில் ஊராட்சிக்குழு தலைவர்  மதிவாணன், கடத்தூர் ஒன்றிய சேர்மன்  உதயா மோகனசுந்தரம், தென்கரைக்கோட்டை  ஒன்றியக்குழு உறுப்பினர் சித்ரா  செந்தில்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>