×

தர்மபுரியில் திமுக எம்பி அலுவலகம்

தர்மபுரி, பிப்.17: தர்மபுரி அப்பாவுநகரில் திமுக எம்பி அலுவலகத்தை, திமுக இளைஞரணி மாநில செயலாளர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
தர்மபுரி மாவட்டத்தில் கடந்த மே மாதம் நடந்த நாடாளுமன்ற பொது தேர்தலில், திமுக சார்பில் போட்டியிட்ட டாக்டர் டிஎன்வி எஸ்.செந்தில்குமார் வெற்றி பெற்றார்.  அவர் பொதுமக்களை எளிதாக சந்திக்க எம்பி அலுவலகம், அப்பாவு நகரில் புதியதாக அமைக்கப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்ட திமுக இளைஞர் அணி நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசிக்க வருகை தந்த, திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், எம்பி அலுவலகத்தை நேற்று திறந்து வைத்தார். அலுவலகத்தில் உள்ள மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உருவப்படத்திற்கு, உதயநிதி ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் தர்மபுரி எம்பி டாக்டர் செந்தில்குமார், மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி எம்எல்ஏ, திருச்சி மாவட்ட பொறுப்பாளர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுகவனம், பென்னாகரம் எம்எல்ஏ இன்பசேகரன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Tags : DMK ,Dharmapuri ,
× RELATED ஆன்லைனில் திமுக உறுப்பினர் சேர்க்கை