×

மாவட்ட நீச்சல் போட்டியில் கிரீன்பார்க் பள்ளி மாணவர்கள் சாதனை

கடத்தூர், பிப்.17: தர்மபுரியில் முதலமைச்சர் கோப்பைக்கான,  மாவட்ட அளவிலான நீச்சல் போட்டி, தர்மபுரி ராஜாஜி நீச்சல் குளத்தில் நடந்தது. இப்போட்டியில், கடத்தூர் கிரீன்பார்க் இண்டர் நேஷனல் சிபிஎஸ்இ பள்ளி மாணவர்கள், ரித்திகா, தில்ரித்திக் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில், மாணவி  ரித்திகா மாவட்ட அளவில் முதலிடமும், மாணவன் தில்ரித்திக் 3ம் இடமும் பெற்றனர். இப்போட்டியில் முதலிடம் பெற்ற மாணவி ரித்திகா, சென்னையில் நடைபெற உள்ள முதலமைச்சர் கோப்பைக்கான இறுதி  போட்டியில் கலந்து கொள்ள உள்ளார். நீச்சல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களை, தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். நீச்சல் போட்டியில் வெற்றிபெற்ற  மாணவர்களை கிரீன்பார்க் கல்வி நிறுவனங்களின் சேர்மன் எவரெஸ்ட்  முனிரத்தினம், நிர்வாக அலுவலர் ராஜா, முதல்வர், இருபால் ஆசிரியர்கள்  பாராட்டினர்.


Tags : District Swimming Competition ,
× RELATED மாவட்ட நீச்சல் போட்டி தூத்துக்குடி பள்ளி மாணவர்கள் சாதனை