×

நெடுஞ்சாலையில் ேதங்கிய மணல் வாகன ஓட்டிகள் அவதி

காரிமங்கலம், பிப்.17: காரிமங்கலம் அருகே நான்கு வழிச்சாலை, மண் சாலையாக மாறிவிட்டதால் வாகன ஓட்டிகள் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி- தொப்பூர் இடையே நான்கு வழிச்சாலை, கடந்த 2009ம் ஆண்டு முதல் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்தது. இந்த சாலையை தனியார் நிறுவனம் அமைத்து, அதற்கான டோல்கேட் கட்டணம் வசூலிப்பதையும் செய்து வருகிறது. கிருஷ்ணகிரி தொப்பூர் இடையிலான நான்கு வழிச்சாலையில், பல்வேறு இடங்களில் சாலைகள் பழுதடைந்த நிலையில் உள்ளது. குறிப்பாக மாட்லாம்பட்டி, பெரியாம்பட்டி, பொன்னேரி, ஆகிய பகுதிகளில் நான்கு வழிச்சாலை, மண் ரோடாக மாறி விட்டது. சாலையில் தேங்கியுள்ள மண்ணை அகற்ற கோரி, வாகன ஓட்டிகள் பல முறை நெடுஞ்சாலை நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. இதனால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே, சாலையில் தேங்கியுள்ள மண்ணை அகற்ற அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுக்க ேவண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Sandy ,motorists ,highway ,
× RELATED ஆனந்தூர் ரோட்டில் மாற்றுப்பாதை அமைக்காததால் அல்லல் படும் வாகன ஓட்டிகள்