×

தர்மபுரியில் வால் வெள்ளரிக்காய் விற்பனை அமோகம்

தர்மபுரி, பிப்.17: தர்மபுரியில் வால் வெள்ளரிக்காய் விற்பனை அமோகமாக உள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில், பென்னாகரம் அருகே நாகதாசம்பட்டி, அன்னசாகரம், அரூர், ஆகிய இடங்களில் சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் வெள்ளரி சாகுபடி செய்யப்படுகிறது. இது 90 நாட்கள் பயிர் என்பதால், விவசாயிகள் விரும்பி சாகுபடி செய்கின்றனர். ஒரு ஏக்கருக்கு 10டன் வரை மகசூல் கிடைக்கிறது. தற்போது கோடை காலம் என்பதால், வெள்ளிக்காய் அறுவடை சீசன் தொடங்கியுள்ளது. ஒரு கிலோ வால் வெள்ளரிக்காய் ₹80க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், ‘திண்டிவனம் பகுதியில் இருந்து வால் வெள்ளரி விலைக்கு வாங்கி வந்து விற்பனை செய்யப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளாக வால் வெள்ளரி விதை வாங்கி வந்து, தர்மபுரி மாவட்டத்திலேயே பயிரிட்டு விற்பனை செய்கிறோம். ஒரு சில விவசாயிகள் வால் வெள்ளரியை கிலோ ₹100க்கு கேரளாவிற்கு விற்பனைக்கு அனுப்பி விடுகின்றனர். ஒரு சிலர் மட்டும் தர்மபுரி, பாலக்கோடு போன்ற இடங்களில் தள்ளுவண்டிகளில் கிலோ ₹80க்கு விற்பனை செய்கிறோம். தர்மபுரி நகரில் ராஜகோபால் பூங்கா, நேதாஜி பைபாஸ் சாலை, அரசு மருத்துவமனை, கலெக்டர் அலுவலகம் பகுதிகளில் வால் வெள்ளரிக்காய் தள்ளுவண்டிகளில் விற்பனை செய்யப்படுகிறது,’ என்றனர்.

Tags : Dharmapuri ,
× RELATED மாணவியை பலாத்காரம் செய்த...