×

அ.பள்ளிப்பட்டியில் பழுதடைந்த தார்சாலையால் வாகன ஓட்டிகள் அவதி

பாப்பிரெட்டிப்பட்டி, பிப்.17: பாப்பிரெட்டிப்பட்டி அருகே, ஜல்லிக்கற்கள்  பெயர்ந்து கரடுமுரடாக மாறியுள்ள தார்சாலையால் வாகன ஓட்டிகள்  அவதிப்படுகின்றனர்.
பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள அ.பள்ளிப்பட்டியில், நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு சர்க்கரை ஆலை-கவுண்டம்பட்டி இடையே உள்ள தார்சாலை, சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு ஜல்லிக்கற்கள் பெயர்ந்து கரடுமுரடாக மாறியுள்ளது. இந்த வழியாக காலை மாலை நேரத்தில் தனியார் பள்ளி கல்லூரி பேருந்துகள், இருசக்கர வாகனங்கள் அதிகம் செல்கிறது. விவசாயிகள் உரங்கள், விளைவித்த தானியங்களை வாகனங்களில் எடுத்துச்செல்கின்றனர். கரடுமுரடான சாலையால் வாகனங்கள் அடிக்கடி பழுதாகிறது. இருசக்கர வாகனங்கள் செல்லும் போது ஜல்லிக்கற்கள் டயரில் பட்டு சிதறி, சாலையில் நடந்து செல்பவர்கள் மீது பட்டு காயத்தை ஏற்படுத்துகிறது. மேலும் டூவீலரில் செல்பவர்கள் சறுக்கி விழுந்து
அடிபடுகின்றனர். இந்த சாலையை சீரமைத்து தரக்கோரி பலமுறை புகார் தெரிவித்தும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து சர்க்கரை ஆலை-கவுண்டம்பட்டி வரையிலான 3 கி.மீ தூரத்திற்கு பழுதடைந்த சாலையை புதுப்பித்து தரவேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags : Motorists ,school district ,
× RELATED பிரதமர் அடிக்கல் நாட்டியும்...