×

மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவு

தர்மபுரி,  பிப்.17: தர்மபுரி மாவட்டத்தில் காலை நேரத்தில் கடும் பனிப்பொழிவு  நிலவுவதால், பொதுமக்கள் பெரிதும் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.
தமிழகத்தில்   பருவமழை பொய்த்ததால், கோடை காலம் தொடங்கும் முன்பே, தர்மபுரி மாவட்டத்தில் வெயில் வாட்டியெடுக்கிறது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வெயிலால் ஏரி, குளங்கள் மற்றும் கிணறுகளில் தண்ணீர் வற்றி வருகிறது.  வனப்பகுதி மற்றும் தனியார் நிலங்கள், விவசாய நிலங்களில் மரம் செடிகள்  காய்ந்து கருகி வருகிறது. சமீபத்தில் நெல், மஞ்சள் உள்ளிட்டவற்றை அறுவடை  செய்த விவசாயிகள், அடுத்த போகம் சாகுபடி செய்வது குறித்து யோத்து  வருகின்றனர். இந்நிலையில், தர்மபுரி - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில்  சென்டர் மீடியன் பகுதியில் உள்ள அரளிச்செடிகள் காயத்துவங்கியது. இதையடுத்து  நெடுஞ்சாலையை பராமரித்து வருபவர்கள் லாரிகளில் தண்ணீர் கொண்டு வந்து  கூடுதலாக செடிகளுக்கு பாய்ச்சி வருகின்றனர்.
 மாவட்டத்தில் பகல்  நேரத்தில் வெயில் சுட்டெரித்தாலும்,  இரவு 10 மணிக்கு மேல் சீதோஷ்ண நிலை  மாறி குளிர் வீசுகிறது. மேலும், அதிகாலை துவக்கி காலை 7 முதல் 8 மணி  வரையிலும்  கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. இதனால் காலை நேரத்தில்  தர்மபுரி - பெங்களூரு நெடுஞ்சாலைகளில் பனி மூட்டமாக இருப்பதால் வாகனங்கள்  முகப்பு விளக்கை எரியவிட்டபடி செல்கின்றன. காலை நேரத்தில் வாக்கிங்  செல்பவர்களின் எண்ணிக்கையும், வாகன போக்குவரத்தும் கணிசமாக குறைந்துள்ளது.

Tags : district ,
× RELATED இமாச்சலப் பிரதேசத்தில் கடும் பனிப்பொழிவு