×

வேப்பிலைப்பட்டியில் பயன்பாடில்லாத குப்பை ெதாட்டி

கடத்தூர், பிப்.17: கடத்தூர் அருகே வேப்பிலைப்பட்டி பகுதியில், பராமரிப்பின்றி இருக்கும் குப்பை தொட்டிகளை, பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடத்தூர் அடுத்த கேத்துரெட்டிப்பட்டி ஊராட்சியில் 4ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சியில் செங்கான்நகர், வேப்பிலைப்பட்டி, சின்னூர், கேத்துரெட்டிப்பட்டி, சவுளுக்கொட்டாய், வேப்பிலைப்பட்டி, அண்ணாநகர், தர்மலிங்கம்நகர் உள்ளிட்ட 13 குக்கிராமங்கள் உள்ளது. இந்த பகுதியில் சேகரமாகும் குப்பைகளை எடுப்பதற்காக, அரசு சார்பில் 20க்கும் மேற்பட்ட குப்பைவண்டிகள் ஊராட்சி நிர்வாகத்திற்கு வழங்கப்பட்டது. ஆனால், வேப்பிலைபட்டி கிராம சேவைமையம் அருகிலே பல மாதங்களாக குப்பை தொட்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த வண்டிகளை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர ேவண்டும் என மக்கள் ேகாரிக்கை விடுத்துள்ளனர்.Tags : neem bar ,
× RELATED தூத்துக்குடியில்...