×

தனியாரிடம் செல்வதால் கூடுதல் செலவு தி.பூண்டி கொத்தமங்கலம் ஊராட்சியில் பேட்டரி வாகனம் மூலம் குப்பைகள் அகற்றும் பணி

திருத்துறைப்பூண்டி, பிப். 17: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஒன்றியம் கொத்தமங்கலம் ஊராட்சியை மாவட்டத்தின் முதன்மை ஊராட்சியாக கொண்டு வருவதற்கான பணிகளை ஊராட்சி நிர்வாகம் செயல்படுத்த தெரு விளக்குகள் பராமரிப்பு , குடிநீர் விநியோகம் உள்ளிட்ட பணிகள் வார்டுகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
குப்பைகள் இல்லாத ஊராட்சியாக மாற்றுவதற்கு குப்பைகளை அகற்ற ஊராட்சி தலைவர் மேனகாவின் மேற்பார்வையில் துப்புரவு பணியாளர்கள் மற்றும் தூய்மைக்காவளர்கள் குப்பைகளை அகற்றும் பணிகளை மேற்கொண்டு திட்டத்தை விரிவுபடுத்தி திடக்கழிவு மேலாண்மை பணிக்கு என கொத்தமங்கலம் ஊராட்சியில் பேட்டரியில் இயங்கும் வாகனத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வந்து குப்பைகள் நாள் தோறும் அகற்றும் பணியை ஊராட்சி தலைவர் மேனகாகோபால கிருஷ்ணன் துவக்கிவைத்தார்.
இதில் கிராம நிர்வாக அலுவலர் முருகானந்தம், ஊராட்சி எழுத்தர் இளங்கோ மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Removal ,panchayat ,Bundi Kothamangalam ,
× RELATED வாக்களிக்க பணம் தர இருப்பதாக புகார் ஊராட்சி மன்ற தலைவி வீட்டில் ரெய்டு