×

விதைகளை பயன்படுத்தி வெள்ளை ஈ தாக்குதலை சமாளிக்கும் பாரம்பரிய நாட்டு ரக தென்னைகள் திருவாரூர் வேளாண்மை உதவி இயக்குனர் தகவல்

திருவாரூர், பிப். 17: வீரிய ஒட்டு ரகங்களைக் காட்டிலும் பாரம்பரிய நாட்டு ரக தென்னைகள் வெள்ளை ஈ தாக்குதலை சமாளித்து பலனளிப்பதாக வேளாண்மை உதவி இயக்குநர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து திருவாரூர் வேளாண்மை உதவி இயக்குநர் ஹேமா ஹெப்சிபா நிர்மலா விடுத்துள்ள செய்திக் குறிப்பில், திருவாரூர் வட்டாரத்தில் தென்னை மரத்தில் காண்டாமிருக வண்டு, சிவப்புக் கூன் வண்டு தாக்குதல்கள் பொது வாக காணப்படும். சில ஆண்டுகளுக்கு முன், இரியோபைட் சிலந்தி தாக்குதல் பெரிய சேதத்தை ஏற்படுத்தியது. இந்த தாக்குதல்களை வீரிய ஒட்டு ரகங் களைக் காட்டிலும், பாரம்பரிய நாட்டு ரக தென்னைகள் நன்கு சமாளித்தன. இப்போது வெள்ளை ஈ தாக்குதலையும் நாட்டு ரகங்களே வெற்றிகரமாக சமாளித்து வருகின்றன.
பொதுவாக விவசாயிகள் அந்தந்த பகுதியில் கிடைக்கும் நாட்டு ரகங்களை பயிரிட்டு வந்தாலும், பொள்ளாச்சி நெட்டை மற்றும் மைசூர் டிப்தூர் நெட் டை நாட்டு ரக தென்னைகள் நல்ல லாபத்தை அளிக்கக் கூடியது. குறிப்பாக டிப்தூர் நெட்டை ரக தென்னை மரம், ஆண்டுக்கு 200 முதல் 250 காய்கள் வரை விளைச்சல் அளிக்கக் கூடியது. ஒரு ஏக்கர் நிலத்தில் 70 தென்னை மரங்கள் நடலாம். இதன் மூலம் ஆண்டுக்கு 15 லட்சம் ரூபாய் வரை வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது. மற்ற நாட்டு ரகங்களில் காய்களின் எண்ணிக்கை 100 முதல் 150 வரை கிடைக்கும்.
நடவு முறை: 25 க்கு 25 அடி இடைவெளியில் 2 அடி ஆழம் 2 அடி அகல குழிகள் எடுத்துக் கொள்ள வேண்டும். வாய்க்கால் ஓரங்களில் ஒரு வரிசையாக நடுபவர்கள் 20 அடி இடைவெளியில் குழி எடுக்கலாம். பொதுவாக, குழி எடுத்து வைத்து அடி மண்ணில் உயிர்சத்து தோன்றுவதற்காக 3 மாதம் கழித்து கன்று நடுவது வழக்கம். ஆனால் உயிர்ச்சத்து மிகுந்த வெளி மண்ணை நிரப்பவதால் குழி எடுத்த அன்றே தென்னங்கன்றை நடலாம்.
குழியில் ஒரு அடி உயரத்துக்கு தொழு உரம், மக்கிய இலை தழை உரங் களை இட்டு நிரப்ப வேண்டும். பிறகு, தென்னங்கன்றின் தேங்காய் மூடு மளவுக்க வெளி மண் போட்டு நிரப்ப வேண்டும். தண்ணீர் ஈரப்பதம் காயாத அளவு பாய்ச்ச வேண்டும். சொட்டு நீர் பாசனம் என்றால் தினமும் 15 நிமிடம் வரை பாய்ச்சலாம். நேரடி பாசனம் என்றால் மண்ணின் தன்மையைப் பொறுத்து 3 நாட்களுக்கு ஒருமுறை பாய்ச்ச வேண்டும். மிக அதிக தண்ணீர் பாய்ச்சத் தேவையில்லை. மண்ணில் ஈரப்பதம் இருந்தால் போதுமானது. மரம் வளரத் தொடங்கியதும் ஆண்டுக்கு ஒருமுறை தொழு உரம் போட வேண்டும். டிப்தூர் ரக தென்னைகள் 3 ஆண்டில் காய்க்கத் தொடங்கிவிடும். மற்ற நாட்டு ரகங்கள் 4 அல்லது 5 ஆண்டுகள் ஆகலாம். டிப்தூர் ரக மரங்களில் மட்டைகள் எக்ஸ் வடிவில் விரிந்து வளரும், தேங்காய் குலைகள் மட்டைகள் மீது தாங்கி நிற்கும்.
சாதாரண நாட்டு ரக தென்னங்கன்றுகள் 50 முதல் 60 ரூபாய் விலையிலும், டிப்தூர் ரக கன்றுகள் 100 ரூபாய்க்கும் கிடைக்கிறது. நாட்டு ரகங்களை விட ஒட்டு ரகங்களில் ஆண்டுக்கு 50 காய்கள் வரை கூடுதலாக கிடைக்கலாம்.
ஆனால் நோய் தாக்குதலுக்கு எளிதில் ஆளாகி விடுவதோடு, வறட்சிக்கும் தாக்குப் பிடிப்பதில்லை. ரகம் தேர்வு செய்வதில் தவறு செய்தால் குறுகிய கால பயிரில் அடுத்த பருவத்தில் சரி செய்துவிடலாம். ஆனால் தென்னை போன்ற நீண்டகால பயிரில் தவறான ரகத்தை தேர்வு செய்துவிட்டால், அதன் நஷ்டத்தை அந்த பயிர் இருக்கும் வரை நாம் சந்திக்க வேண்டி வரும். அதனால் தென்னை பயிரிடும் விவசாயிகள் சாதக பாதகங்களை சிந்தித்தே ரகங் களை தேர்வு செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் வேளாண்மை உதவி இயக்குநர் ஹேமா ஹெப்சிபா நிர்மலா தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நீலகிரி, கன்னியாகுமரி மாவட்டங்கள் தவிர்த்து அனைத்து மாவட்டங்களிலும் பயிரிடப்பட்டாலும், பெரம்பலூர், திண்டுக்கல், திருப்பூர், கோயமுத்தூர், நாமக்கல், திருச்சி போன்ற மாவட்டங்களில் அதிக பரப்பில் சின்ன வெங்காயம் பயிரிடப்படுகிறது. தமிழ்நாட்டில் 2018-19 ஆம் ஆண்டில் 32,044 எக்டரில் பயிரிடப்பட்டு 3,46,562 டன்கள் மகசூல் பெறப்பட்டது. உற்பத்தி செய்யப்படுகின்ற சிறிய வெங்காயத்தில் கணிசமான அளவு விதைக்காய்க்காக பயன்ப டுத்தப்படுவதனால் உற்ப த்தி முழுவதையும் பயன்படுத்த முடியாத சூழல் உருவாகின்றது. மேலும் நடவிற்குத் தேவைப்படும் விதைக்காய்களின் அளவும் அதிகமாக இருப்பதனால், அதாவது ஒரு ஏக்கர் நடவு செய் வதற்கு 600கிலோ தேவை ப்படுவதனால் சாகுபடி செலவும் விவசாயிகளுக்கு அதிகமாகின்றது. உற்பத்தி குறைவின் காரணத்தாலும் வெளிமாநிலங்களில் இருந்து வரத்து குறைந்தாலும் வெங்காயக் குமிழங்களின் விலை மிகஅதிகமாகி விடுகிறது. இதுபோன்ற சம யங்களில் குமிழங்கள் மூலம் வெங்காயம் சாகுபடி செய்வது சவாலாக உள்ளது. குமிழங்களுக்கு மாற்றாக விதை மூலம் சிறிய வெங்காயத்தை சாகுபடி செய் தால் கணிசமான அளவில் சாகுபடி செலவைக் குறைக்கலாம். ஏனெனில் 1கிலோ வெங்காய விதையின் விலை ரூ.2ஆயிரம் முதல் ரூ3ஆயிரம் வரை மட்டுமே. ஒரு ஏக்கருக்கு ஒருகிலோ விதைபோதுமானது.

Tags : Thiruvarur Agricultural ,
× RELATED முத்துப்பேட்டை அருகே தென்னங்கன்றுகளுக்கு தீ வைத்தவருக்கு கத்திக்குத்து