பெரம்பலூர், பிப்.17: பெரம்பலூரில் சிவராத்திரியை முன்னிட்டு பிரம்மா குமாரிகள் உலக அமைதிக்காக நடத்திய ஆன்மீக ஊர்வலம் நேற்று நடைபெற்றது.
பெரம்லூரில் வருகிற 21ம் தேதி நடைபெற உள்ள மஹா சிவராத்திரியை முன்னிட்டு, பிரஜாபிதா பிரம்மா குமாரிகள் ராஜயோக தியான நிலையத் தின் சார்பாக, உலக அமைதிக்காக நடத்திய ஆன்மீக ஊர்வலம் நேற்று நடைபெற்றது. பெரம்பலூர் பழைய பஸ்டாண்டுபகுதியில் தொ டங்கிய ஊர்வலம், பெரியார்சிலை, காமராஜர்வளைவு, சங்குப்பேட்டை, ரோவர் வ ளைவு, வெங்கடேசபுரம் வழியாக பாலக்கரையில் முடிவடைந்தது.
ஒருங்கிணைப்பாளர் எழிலன் தலைமையில் நடைபெற்ற ஊர்வலத்தில், பெரம்பலூர் மதனகோபாலபுரம், ஆரோக்கியா நகர் கிளை அலுவலகம், அரியலூர் பிரஜாபிதா பிரம்மா குமாரிகள் ராஜயோக தியான நிலையம், திருச்சி, உறையூர் பிரஜா பிதா பிரம்மாகுமாரிகள் ஈஸ்வரிய விஷ்ணு வித்யாலயம் ஆகியவற்றின் நிர்வாகிகள், பிரம்மா குமாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.