×

புல்வாமா தாக்குதல் நாகை இஜிஎஸ் பிள்ளை கல்லூரி மாணவ, மாணவிகள் அஞ்சலி

நாகை,பிப்.17: புல்வாமா தாக்குதலில் பலியான இந்திய ராணுவ வீரர்களுக்கு நாகை இஜிஎஸ் பிள்ளை கலை அறிவியல் கல்லூரியில் மாணவ, மாணவிகள் அஞ்சலி செலுத்தினர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் புல்வாமா மாவட்டத்தில் அவந்திபோரா பகுதியில்  நகர் ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் மத்திய சேமக் காவல் படையினர் சென்று கொண்டிருந்த வாகனங்கள் மீது 2019 பிப்ரவரி 14ம் தேதி நடந்த தற்கொலை தாக்குதலில் இந்திய சேமக் காவல் படையினர் 40 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் நடந்து 1 வருடம் ஆகிறது.
இதை முன்னிட்டு நாகை இஜிஎஸ் பிள்ளை கலை அறிவியல் கல்லூரி மாணவ மாணவிகள் மெழுகுவர்த்தி ஏந்தி உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். மேலும் ராணுவ பணியில் சேர அனைவரும் முன் வர உறுதி மொழி எடுத்தனர்.
இவ்நிகழ்வில் கல்லூரி முதல்வர் நடராஜன் முன்னிலை வகித்தார். மேலும் கல்லூரி தலைவர் ஜோதிமணி அம்மா, செயலர் பரமே ஸ்வரன், இயக்குநர் சுமதி பரமேஸ்வரன், அறக்கட்டளை உறுப்பினர்கள் அருள் பிரகாஷம், கோவிந்தசாமி, சங்கர் கணேஷ், இயக்குநர் விஜயசுந்தரம், முதன்மை செயல் அலுவலர் சந்திரசேகர், துணை முதல்வர் கற்பகம், துறை தலைவர் சுகுமார், ஆசிரியர் விஜயராஜ், செல்வி சிவரஞ்சனி, கார்த்திக் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

Tags : Pulwama Attack Nagai EGS Pillai College Student ,Students Anjali ,
× RELATED ஆட்டம் பாட்டத்துடன் நடந்த அனல் பறக்கும் பிரசாரம் ஓய்ந்தது