×

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தீர்மானம் புதுச்சேரி முதல்வருக்கு காங்கிரஸ் நன்றி

காரைக்கால், பிப்.17: குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றிய, புதுச்சேரி முதல்வருக்கு காரைக்கால் மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
காரைக்கால் மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம், காரைக்காலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு தலைவர் சோழசிங்கராயர் தலைமை வகித்தார். மாநில துணை தலைவர் ஜெரால்ட், மாவட்ட துணை தலைவர் அப்துல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக புதுவை மாநில காங்கிரஸ் சிறுபான்மை துறை தலைவர் முகமது ஹஸன் கலந்துகொண்டார்.
கூட்டத்தின் முடிவில், புதுச்சேரி சட்டமன்ற கூட்டத்தில், மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமைத் திருத்த சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றிய புதுவை மாநில முதல்வர் நாராயணசாமிக்கும், அமைச்சர்கள், ஆதரவு தெரிவித்த பேரவை உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவிப்பது, புதுச்சேரி மாநிலத்தில் காரைக்கால் மற்றும் பாகூர் பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்த முதல்வருக்கும், வேளாண் துறை அமைச்சர் கமலக்கண்ணனுக்கும் நன்றி தெரிவிப்பதோடு, சரியான முறையில் நடவடிக்கை எடுத்ததற்கு வரவேற்பும் தெரிவிக்கப்பட்டது.
கூட்டத்தில், வடக்கு தொகுதி தலைவர் ஜெயசீலன், திருநள்ளாறு தொகுதி தலைவர் முகமது அனிபா, நிரவி- திருமலைராயன்பட்டினம் தொகுதி தலைவர் கனிஷா மரைக்காயர், நெடுங்காடு தொகுதி தலைவர் ஆரோக்கியராஜ், தெற்கு தொகுதித் தலைவர் அப்துல் மஜீத் மரைக்காயர், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Congress ,Puducherry CM ,
× RELATED சொல்லிட்டாங்க...