×

கரூர் கலெக்டர் அலுவலகத்தில் பாசி படர்ந்திருக்கும் குடிநீர் தொட்டி

கரூர், பிப்.17: கரூர் கலெக்டர் அலுவலகத்தில் குடிநீர் தொட்டியை சுத்தம் செய்யாததால் பாசிபடர்ந்து காணப்படுகிறது. இதனால் குடிநீர் பருக மக்கள் அச்சம் அடைந்து வருகின்றனர்.
கரூர் மாவட்ட
கலெக்டர் அலுவலகத்தில் நுழைவு பகுதியில் படிக்கட்டு அருகில் பொதுமக்கள் உபயோகத்திற்காகு குடிநீர் தொட்டி வைக்கப்பட்டுள்ளது. சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இந்த தொட்டியில் நிரப்பப்படுகிறது. இந்த தொட்டி முறையாக பராமரிக்கப்படாமல் உள்ளது. தொட்டியை சுத்தம் செய்து நீண்ட நாட்கள் ஆவதால் தொட்டிக்குள் பச்சை நிறத்தில் பாசிபடர்ந்து அசுந்தமாக காணப்படுகிறது. சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கினாலும் குடிநீர் நிறைந்திருக்கும் தொட்டியானது சுத்தம் இல்லாமல் உள்ளது. இதன் அருகிலேயே டெங்கு கிருமிகளை கட்டுப்படுத்தும் நிலவேம்பு கசாயம் வழங்கப்படுகிறது. எனினும் தொட்டியை சுத்தம் செய்யாததால் சுகாதாரமற்ற குடிநீரை பருகவேண்டிய நிலை உள்ளது. தொட்டியை உரியகாலத்தில் சுத்தம் செய்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags : Moss ,collector ,office ,Karur ,
× RELATED மண்டல அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம், பயிற்சி வகுப்பு