×

பள்ளியில் விஷம் குடித்த மாணவி சாவு

கோவை, பிப்.17:  அன்னூர் கரியாகவுண்டனூர் பகுதியை சேர்ந்தவர் புஷ்பராஜ். டெய்லர். இவருக்கு மகாபார்கவி (16), விஜய (13) என இரு மகள் உள்ளனர்.
இதில் மகா பார்கவி அரசு பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். கடந்த 13ம் தேதி புஷ்பராஜ் தனது இரு மகள்களையும் பள்ளிக்கு அழைத்து சென்று விட்டு விட்டு வந்தார்.
பள்ளி வகுப்பு அறைக்கு சென்ற மகா பார்கவி சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார். அவர் புத்தக பையில் பூச்சி மருந்து பாட்டில் இருந்தது. வகுப்பறையில் அவர் விஷம் குடித்திருக்கலாம் என தெரியவந்தது.
இதை தொடர்ந்து மாணவி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார்.
பெற்றோர் நன்றாக படிக்க சொல்லி கண்டித்ததால் மனம் உடைந்த மகா பார்கவி விஷம் குடித்து தற்கொலை செய்திருப்பதாக தெரிகிறது. இது தொடர்பாக அன்னூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Tags : Poison student ,school ,
× RELATED கொரோனா நோய் தடுப்பு பணிகளில்...