×

ஆழியார் அணை கரையோரம் உலா வரும் முதலையால் பரபரப்பு

பொள்ளாச்சி, பிப்.17:   பொள்ளாச்சியை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில்,  கடந்தாண்டு ஜூலை முதல் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்ததால், மொத்தம் 120 அடி கொண்ட அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து குறிப்பிட்ட மாதங்களில்  அணை முழு அடியை எட்டியது.
இதையடுத்து, நவம்பர் மாதத்தில் வடகிழக்கு பருவமழை சிலநாட்கள் மட்டுமே பெய்தது. அதன்பின், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை இல்லாததால், கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து ஆழியார் அணைக்கு தண்ணீர் வரத்து குறைய துவங்கியதால்,  அணை நீர்மட்டம் கடந்த டிசம்பர் மாதம் இறுதியில் 100 அடியாக சரிந்தது.
இந்நிலையில், ஆழியார் அணையில் இருந்து தொடர்ந்து தண்ணீர் திறப்பால், கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக நீர்மட்டம் கிடுகிடு என குறைந்தது.

Tags : Aliyar Dam ,river ,
× RELATED குழித்துறை தாமிரபரணி ஆற்றில் மணல்...