×

பாபநாசம்- சாலியமங்கலம் சாலையில் வேகத்தடையில் வெள்ளை வண்ணம் பூச வலியுறுத்தல்

பாபநாசம், பிப்.17: பாபநாசம்- சாலியமங்கலம் சாலை முக்கியமானச் சாலையாகும். இந்தச் சாலை வழியே ஏராளமான வாகனங்கள் தினமும் சென்று வருகின்றன.இந்தச் சாலையில் தனியார் மேல் நிலைப் பள்ளி, புதிய பேருந்து நிலையம், ரயில் நிலையம், பேரூராட்சி மன்றம் ஆகியவை உள்ளன. இந்தச் சாலையை விரிவுப் படுத்தி பாபநாசம் ரயில் நிலையம் அருகிலிருந்து அண்ணா உணவகம் வரை 4 வேகத்தடைகள் அமைக்கப் பட்டுள்ளன.

இந்த வேகத்தடையில் அடிக்கப் பட்டிருந்த வர்ணம் அழிந்து விட்டதால் வேகத் தடை இருப்பதால் வாகன ஓட்டிகள் தடுமாறி கீழே விழுகின்றனர். எனவே இந்த வேகத் தடைகளில் அழியாத வகையில் வர்ணம் அடிக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர். இதேப் போன்று பாபநாசம் அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளி மைதானம் அருகிலுள்ள வேகத் தடையிலும் வர்ணம் அடிக்க வேண்டும் என்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : road ,Papanasam- Saliyamangalam ,
× RELATED மருத்துவ ஊழியர்களுக்கு பாதுகாப்பு உபகரணம்: கமல்ஹாசன் வலியுறுத்தல்