×

அறந்தாங்கி அருகே மின்கம்பி உரசி வைக்கோல் ஏற்றி சென்ற சரக்கு வாகனம் எரிந்து நாசம் தொடரும் விபத்தை தடுக்க கோரிக்கை

அறந்தாங்கி, பிப்.17: அறந்தாங்கியை அடுத்த ஆவணத்தான்கோட்டையைச் சேர்ந்த கணேசன் என்பவர் தனது வீட்டில் வளர்க்கும் கால்நடைகளின் தேவைக்காக நாகுடி பகுதிக்கு சரக்கு வாகனத்தில் சென்று வைக்கோல் வாங்கினார். பின்னர் வைக்கோலை வாகனத்தில் ஏற்றிக் கொண்டு, நாட்டுமங்கலம் வழியாக ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார். நாட்டுமங்கலம் வீரமாகாளியம்மன் கோயில் அருகே வரும்போது, சாலையின் ஓரத்தில் தாழ்வாக சென்ற மின்கம்பி, வைக்கோல் மீது உரசியதால், வைக்கோல் திடீரென்று தீப்பற்றியது. உடனே வாகனத்தில் இருந்தவர்கள் அதில் இருந்து இறங்கி காயமின்றி உயிர்தப்பினர். சரக்கு வாகனம் தீப்பற்றி எரிவது குறித்து அப்பகுதி மக்கள் அறந்தாங்கி தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறைக்கு தெரிவித்தனர். தகவலின்பேரில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறையினர் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் சரக்கு வாகனம் முற்றிலும் எரிந்து நாசமானது. இச்சம்பவம் குறித்து அறந்தாங்கி இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.தாழ்வாக செல்லும் மின்கம்பிகளால் தொடரும் தீவிபத்து: கஜா புயலின்போது அறந்தாங்கி பகுதியில் நூற்றுக்கணக்கான மின்கம்பங்கள் அடியோடு தரையில் சாய்ந்தன. மேலும் பல்வேறு பகுதிகளில் மின்கம்பங்கள் லேசாக சாய்ந்ததால், மின்கம்பிகள் தாழ்வாக செல்கின்றன. கடந்த ஆண்டு நாட்டுமங்கலம் வீரமாகாளியம்மன் கோயில் அருகே வைக்கோல் ஏற்றி வந்த சரக்கு வாகனம் ஒன்று தாழ்வாக சென்ற மின்கம்பியில் உரசி தீப்பிடித்து சேதமானது. அப்போது அப்பகுதி பொதுமக்கள் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை சீரமைக்க வலியுத்தினர். ஆனால் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை சீரமைக்க தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் நடவடிக்கை எடுக்க வில்லை.

இந் நிலையில் தற்போதும் தாழ்வாக சென்ற மின்கம்பியில் உரசி கடந்த ஆண்டைப்போலவே சரக்கு வாகனம் தீப்பற்றி சேதமாகி உள்ளது. எனவே இனிமேலாவது உடனடியாக தாழ்வாகச் செல்லும் மின்கம்பிகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.நாட்டுமீன் தனிருசி...திருமயம்,அரிமளம் பகுதியில் உள்ளகண்மாய்,ஆறுகளில் கிடைக்கும் மீன்கள் தனித் தனிருசிகளைகொண்டதாகஉள்ளது. மேலும் செம்மண்,காிசல் உள்ளிட்ட மண்ணுக்கு ஏற்றவாறும் மீனின் ருசிமாறுபடும். நாட்டுமீன் சாப்பிட்டு பல வருடங்கள் ஆனநிலையில் நாட்டுமீன்களை பார்ப்பதே அபூர்வமாக உள்ளதாகஅப்பகுதிமக்கள் தெரிவித்தனர். எந்த மீன் கடையில் பார்த்தாலும் வளர்ப்பு, கடல் மீன்களேஅதிகளவில் விற்பனைக்கு வருகிறது. இதே நிலை நீடித்தால் எதிர்வரும் தலைமுறைக்கு நாட்டுமீன்கள் என்ன என்பதே தொியாமல் போய்விடும்.

Tags : crash ,Aranthangi ,
× RELATED கடத்தப்பட்ட அரசு பஸ் விபத்தில் சிக்கியது