×

உடல்நலக்குறைவால் எஸ்ஐ சாவு

விக்கிரவாண்டி, பிப். 17: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பேரூராட்சி பாரதி நகரைச் சேர்ந்தவர் சிவசங்கரன் (58). சிறப்பு உதவி ஆய்வாளர். கஞ்சனூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணி செய்தார். இந்நிலையில் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் பணி விடுப்பு எடுத்துவீட்டில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று வீட்டில் இருந்தபோது உடல்நிலை பாதிப்பு ஏற்ப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். இவருக்கு பரமேஸ்வரி என்ற மனைவியும், வெங்கடேஷ், பரத் ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.


Tags : SI ,
× RELATED நெல்லை ரயில்வே எஸ்ஐ சஸ்பெண்ட்