×

தீயணைப்பு நிலையத்தில் இயக்குனர் திடீர் ஆய்வு

பண்ருட்டி, பிப். 17: பண்ருட்டி தீயணைப்பு நிலையத்தில் தீயணைப்புத்துறை இயக்குனர் சைலேந்திரபாபு திடீர் ஆய்வு மேற்கொண்டார். இதில் தீயணைப்பு நிலையத்தில் உள்ள கோப்புகளை ஆய்வு செய்து பண்ருட்டி பகுதியில் தீ விபத்து ஏற்பட்டால் தீயை அணைப்பதற்கு போதிய அளவில் தீயணைப்பு வாகனம் மற்றும் கருவிகள் கைவசம் உள்ளதா என கேட்டறிந்தார். தீ விபத்தில் பாதிப்படைவோர் போன் செய்தால் விரைவாக சென்று தீயை அணைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளை எவ்வாறு மேற்கொள்வீர்கள் என்பது குறித்தும் கேட்டறிந்தார்.  மேலும் விபத்து காலங்களில் விரைந்து செயல்படவும் தீயணைப்புத்துறைக்கு தேவையான தற்போது உள்ள சூழ்நிலையில் அதிநவீன கருவிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். மாவட்ட தீயணைப்பு அலுவலர் குமார், உதவி மாவட்ட அலுவலர் செந்தில், டிஎஸ்பி நாகராசன், நிலைய அலுவலர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் உடன் இருந்தனர்.

Tags : inspection ,fire station ,
× RELATED கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 1200 பேர்...